பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் 55

இம் மலையி&ன ஏறி இறைவனேக் கண்டு வணங்க நல்ல படிகள் உண்டு, வழியில் இடும்ப&னக் கண்டு வணக் கம் செலுத்தலாம். இவனே இம் ம8லயினை ஈண்டுக் கொணர்ந்தவன் என்பது புராண மரபு. மலே மீதுள்ள ஆண்டவனது பின்புறத்தில் முஸ்லிம்கள் அமர்ந்து வருவார் போவார்க்குச் சாம்பிராணிப் புகையூட்டித் திரு நீறு அளித்துப் பழநி ஆண்டவன் தங்கள் தெய்வம் என்ற குறிப்பினைக் காட்டிக் கொண்டி ருக்கின்றனர். மலையின்ைச் சுற்றி வரவும் வசதியுண்டு. மலையினைச் சுற்றி வருகையில் வண்டுகள் ஒலியினையும் மலர்கள் கீழே விழுந்து அழகிய காட்சி அளிப்பதையும், அருணகிரியார் உன்னிப்பாகக் கவனித்துப்பாடுகிரும். பரிமள கற்காடவி அரியளி சுற்று பூவுதிர் பழநிமலை’ என்பது அவர் வாக்கு. மலையினை விட்டுக்கீழே இறங்கும்போது, ஒரு பெரிய நந்தி இருப் பதையும் கண்டு களிக்கலாம்.

திருவேரகம்

திருவேரகம் திருமுருகனது நான்காம் படைவீடு. பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன் என நக் கீரர் பாடுதலால் இத்தலத்தில் இருப்பதை முருகன் பெரி தும் விரும்பின்ை என்பது புலனுகிறது. ஏரகம் என்பது இக்காலத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே நாலுகல் தொலைவில் உள்ள சுவாமிமலை எனக் கருதுகின்றனர். இங் ங்னம் கருதுதற்கு அருணகிரியார் வாக்குகள் சான்ருக உள்ளன. அவர் தாம் திருவேரகமும் சுவாமிமலையும் ஒன் றெனக் கருதுகின்றனர். இத்தலம் இன்ன இடத்தில் இருக்கிறது என்பதையும் தெளிவுறக் கூறுகின்றனர். இவ் வுண்மைகளே.அவர்தம் திருவாக்குகளாகிய,

ஏரக வெற்பெனும் அற்புதம் மிக்கசு

வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ