பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

ராஜத லக்ஷண லகூடிாமி பெற்றருள் பெருமாளே

குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து குடகா விரிக்கு வடபாலார்

திருவே ரகத்தில் உறைவா என்றும்

வளைகுல மலங்கு காவி ரியின் வட புறம்சு வாமி

மலைமிசை விளங்கு தேவர் பெருமாளே என்றும்,

காவேரி வடகரைக் சாமிமலையுறைதம்பிரா என்றும்,

ஏலம்இல வங்க வர்க்க நாகம் வகு ளம்ப டப்பை

பூகமரு தந்த தழைக் கர வீரம் யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்

ஏரகம மர்ந்த பச்சை மயில்வீரா என்றும் பாடும் ஆற்ருல் தெளியலாம்.

சுவாமி மலையினைக் குருமலை என்றும் அருணகிரியார் குறிப்பிடுகின்ருர், நளின குருமலை மருவி என்றும் குரு மலேயில் மருகுருநாத என்றும் குருமலை விளங்கு ஞான சற்குருநாத என்றும், குருவெற்பிலுறை என்றும் குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே என்றும் இருமலை யில் யோகத்த மர்ந்த பெருமாளே என்றும் குருமலை மீத மர்ந்த பெருமாளே என்றும் குருமலை மருவிய என்றும் குருகிரி மேவிய என்றும் மந்திர குருமலைதனில் அமர் பெருமாளே என்றும் பாடியுள்ளார்.

முருகப்பெருமான் சிவபெருமானுக்குப் பிரணவ உப தேசம் செய்த காரணமே இம்மலை இப்பெயர் பெற்றதற்குக் காரணம் என்பது அவரது கருத்து. இவர் முருகப்பெரு மானிடத்துக் கொண்ட பேரன்பின் மிகுதியினுல் சிவபெரு மான் முருகனை மூன்று முறை சுற்றி வந்து கைகட்டி வாய் பொத்தித்த லேவணங்கிப் பிரணவ உபதேசம் பெற்ருர்