பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் 6?

என்ற குறிப்பையும்

சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போதபுதத

சீராக வேயுரைத்த குருநாதா என்றும் பாடியருளினர். இக்கருத்தை வலியுறுத்தக் கந்தர் அந்தாதியில் மாற்கரியார்க்கு உபதேசம் செய்த என்றும் பரமர்க்கு ஒரு குருக்கள் என்றும் முத்தர் புகழ் தம்பிரானே என்றும் பாடிக் காட்டினர். இறைவன் உபதேசம் பெற் றுக் கீழ்ப்பட்டதற்கு ஏற்பவும், முருகன் உபதேசம் செய்ததனேக் காட்டவும் இன்றும் சுவாமி மலைத்தலத்தில் இறைவன் திருக்கோயில் தாழ இருக்க, முருகப் பெருமான் கோயில் உயர இருத்தலைக் காணலாம். இக்கருத்தைக் காட்டவே இது இங்ங்னம் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை முருகனது கோவில் கட்டட அமைப்பினின்றும் ஊன்றிக் கவனிப்பின் உணரலாம்.

இறைவன் முருகனிட மிருந்து பிரணவப் பொருள் உண்மையினை உணர்ந்தது உண்மையே. அதனுல் இறை வன் பிரணவ உபதேசம் பெற்ருன் என்பது பொருளன்று. இறைவன் முருகனைச் சுற்றி வந்து அப்பெரும் பொருளை உணர்ந்தான் என்பதும் இல்லை; முருகனை வாரி எடுத் துத் தன் தொடைமீது அமர்த்தி, செவியினை அவன் வாயருகு வைத்து அதன் பொருளை அவன் அறிந்திருப்பது உண்மையா என்று உணரக் கேட்ட நிலையே அன்றி. வேறன்று. இதுவே மரபுஎன்பதைக் கந்தபுராணம் கசடறக் காட்டுகின்றது.

காமரு குமரன் சென்னி எதுமென உயிர்த்துச் செக்கர்த் தாமரை புரையும் கையால் தழுவியே அயனும் தேற்ரு ஓ மென உரைக்கும் சொல்லின் உறுபொருள் போமெனில் அதனை இன்னே புகலென் இறைவன்

சொற்ருன்