பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

முற்ருெருங் குணமும் ஆதி முதல்வகேள் உலகம் எல்லாம் பெற்றிடும் அவட்கு நீ முன் பிறர்உண ராத ஆற்ருல்

சொற்றதோர் இனைய மூலத் தொல்பொருள் யாரும்

கேட்ப

இற்றென இயம்ப லாமோ மறையினல் இசைப்ப தல்லால் என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின் என்னுத் தன்திருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை என்னும்

ஒன்ருெரு பதத்தின் உண்மை உரைத்தனன் உரைத்தல் கேட்டு

நன்றருள் புரிந்தான் என்ப ஞான நா யகளும் அண்ளுல் என்ற பாடல்களைக் காண்க.

ஆனல், சுவாமி நாதன் என்றும், குருநாதன் என்றும் தகப்பன் சாமி என்றும் கூறப்படுதல் காரணம் என்னவோ எனில், சுவாமிகளாகிய தெய்வங்களுக்குத் தலைவன் என்றும் அவ்வாறே சாமிகளுக்கு இவன் தந்தை யாக இருப்பவன் என்றும் பொருள் தரும் நிலையில் அப் பெயர்கள் உள்ளன். இதனைக் குமரகுருபரர் வாக்காகிய 'செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாளா என்று பாடியிருத்தல் மூலம் பார்த்துக் கொள்ளலாம். குருநாதன் என்பதன் பொருள் அகத்தியர், நக்கீரர், அருணகிரியார், சிதம்பர சுவாமிகள், இராமலிங்கர் போன்ற உண்மையாசிரி யார்கட்கு உபதேச மூர்த்தியாக இருந்து உபதேசம் செய்த காரணத்தால் குருநாதன் என்ற பெயரை முருகன் பெற்றனன் என்க.

சுவாமிமலை சிறந்த மலேதான். நல்ல வளமுடையது தான். இதில் எந்த விதமான ஐயமும் இல்லை. திருமாலும் வணங்கும் பதிதான். ஞானிகள் சேரும் பதியும் இதுவே. அருணகிரியார்க்குப் பாத தரிசனம் காட்டிய பதியும் இதுவே. இவை அனைத்தும் அருணகிரியார் வாக்கைக் கொண்டே அறியலாம்.