பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் 警

யாகும். திருவேங்கடமலை திருமால் திருப்பதிகளுள் தலை! சிறந்தபதி. வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் திரு வேங்கடவா என்று ஆழ்வார் திருமாலப் பாடுகிருர்.

மறந்தும் புறந் தொழாத பிரம வீரவைஷ்ண' வராம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்,

மாண்டு பிறந்து ழலும் வைகுந்தம் புக்கவரும்

கண்டு தொழக் காதலிக்கும் வேங்கடமே

என்றும்,

வாடப் பசித்த வரியுழுவை வாலாட்டி மேடத்தைப் பார்த்து றுமும் வேங்கடமே-மாடத்துக் கம்பமத மாவென்ருன் காசினிக்கும் வெண்ணெய்ச் செம்பவள மாவென்ருன் சேர்வு

என்றும் பாடி அப்பதி திருமால் பதி என்று காட்டினர். இளங்கோ அடிகளும் அப்பதி திருமால்பதி என்னுங் கருத் தாதலே,

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி உரு மருங் கோங்கிய இடைநிலத் தானத்து மின்னுக் கொடிஉடுத்து விளங்குவில் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகைஅணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

எனத் திருமாலின் நின்ற கோலத்தைப் பாடியருளினர்