பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

ஆளுல் அருணகிரியார்,

மலர்க் கமல வடிவுள செங்கை அயிற்குமர குகைவழி வந்த

மலைச் சிகர வடமலை நின்ற பெருமாலே என்றும்,

வேந்தகு மாரகுக சேந்தம யூரதட

வேங்கட மாமலையில் உறைவோனே என்றும்,

சிலை வாங்கிய நாரண ஞர்மரு

மகளும்குக னேபொழில் சூழ்தரு

திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே என்றும் பாடியருளினர். ஆகவே இத்தலம் சைவர் கட்கும் வைணவர்கட்கும் உரிய தலமாக விளங்கியது போலும். இன்னும் வடநாட்டினர் திருவேங்கட முடை யானைப் பாலா p என்று போற்றிப் புகழ்கின்றனர். இச் சொல் முருகன், பாலசுப்பிரமணியன் என்னும் பொருள்தரும் சொல்லாக உள்ளது. ஆகவே, இது முருகன் தலம் என்று கருதுதற்கும் இடம் இருக்கிறது. இன்றும் திருவேங்கட முடையானுக்கு வில்வத் தழைகளால்தான் அர்ச்சனை நடைபெறுகிறது. நெற்றியில் கோபிச்சந்தனம்ே அணி யப்படுகிறது. மூலட்டானத்தை ஆராய்ந்து பார்த்தால் முருகப் பெருமானுக்குரிய சின்னங்களே தென்படக் கூடிய நிலையில் இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். ஆகவே, இது முருகன் தலமாக இருத்தலில் தவறில்லை என்க. மால் முருகனின் மாமதைலின் இருவரையும் இம்மலையில் நாம் வணங்குதற்குரியோம் என்று கூறிக் கொண்டு மேலே செல்வோமாக. பழமுதிர்சோலை

பழமுதிர் சோலை, இது ஆறுமுகப் பெருமானது படை வீடுகளுள் ஆருவது படைவீடாகக் கூறப்படுவது. இதனை