பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் 63

மதுரைக்கு வடக்குப் பன்னிரண்டு கல் தொலைவில் உள்ள இது போது கள்ளழகர் கோவில் என்று கூறப்படுகின்ற தலம் என்று கருதுகின்றனர். கள்ளழகர் கோயில் திரு மால் இருஞ் சோலே என்று கூறப்படுகிறது. ஆகவே, திருமால் இருஞ் சோலேதான் பழமுதிர் சோலே என்று இயைத்துக் கூறுகின்றனர். திருமால் இருஞ் சோலே திருமாலுக்குரியது என்பது சங்க நூலாம் பரிபாடலால் புலனுகிறது. ஓங்கு இருங்குன்றம் நாறிணர்த் துழா யோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ என்பது பரிபாடல். திருமால் குன்றம் என்பர் இளங்கோ அடிகள். திருமுருகாற்றுப்படையின் மூலம் பழமுதிர் சோலை திருமா லுக்குரியபதி என்ற குறிப்புக் காணப்பட்டிலது. பழமுதிர் சோலே நல்லவளமான அருவியினே புடையது என்ற குறிப்புத்தான் காணப்படுகிறது. இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலே என்பது அவ்வடி. இதற்கு உரைவகுத்த நச்சினர்க்கினியர் மலையின் உச்சியினின்றும் இழும் என்னும் ஒசை படக் குதிக்கும் அருவியை யுடைய பழம் முற்றின சோலைகளையுடைய மலை என்று வகுத் தனர்.

இப்பதியும் திருப்பதி போலத் திருமாலுக்கும் திரு முருகனுக்கும் உரியபதி போலும். இங்குச் சரவணப் பொய்கை என்னும் தீர்த்தம் இருந்ததாகச் சிலப்பதி காரம் கூறுகிறது. அதனை,

திருமால் குன்றத்துச் செல்குவீ ராயின்

விண்ளுேர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணப்பொய்கை உள என்ற சிலப்பதிகார அடிகளில் காணலாம். இங் குள்ள திருமாலுக்குத் திருப்பதியில் நடப்பது போல வில் வார்ச்சனை நடைபெறுதலேக் காணலாம். கோயில் நுழை