பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் ፅß

பழமுதிர் சோ8ல ம8லயைப் பற்றி வேறுவிதமான கருத்தும் உண்டு. அதாவது அது வள்ளிமலை என்பதாகும். இங்குத்தான் முருகன் கிழவுருவுடன் சென்று வள்ளிமுன் நின்றனர் என்பதாம். இதற்கு எடுத்துக் காட்டாக,

எழமுதிரைப்புனத் திறைவி முன்புதன் குழமுதிர் இளநலம் கிடைப்ப முன்னவன் பழமுதிர் களிறென வருதல் வேண்டிய பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம் என்ற கந்த புராணச் செய்யுளைக் காட்டுவர்.

இந்தக் குறிப்பு அருணகிரியார் வாக்காலும் அறிய வருகிறது. -

அருணகிரியார் வள்ளிம8லயில் பாடிய திருப்புகழ்கள் பதினென்று. அவை எல்லாவற்றிலும் வள்ளியம்மையாரின் மணமே பேசப்பட்டுள்ளது.

வள்ளி படச்சாரல் வள்ளிமலை மேவு

வள்ளிமண வாளப் பெருமாளே என்றும்,

வள்ளிக் குழாம் அடர்ந்த வள்ளிக்கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே என்றும்,

வள்ளிக் குழாத்து வள்ளிக்கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே என்றும், r

வனசார் மரபினில் வரும்ஒரு மரகத

வள்ளிக்கு வாய்த்த பெருமாளே என்றும்,

வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று

வள்ளியை மணந்த பெருமாளே என்றும்,

வடிவாற்றி வள்ளி அடிபோற்றி வள்ளி மலைகாத்த நல்ல மணவாளா என்றும்,

வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்

வசநின்று கும்பிடும் ப்ெருமாளே என்றும் பாடியுள்ளார்.

மு. 5