பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66; கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

வள்ளியம்மையார் இங்குஅமர்ந்து தினைப்புனங்காத்தி. ருந்தமையால் இம்மலை வள்ளிமலை என்ற பெயரையே கொண்டது என்ற குறிப்பில் அரிவை விலங்கல் என்று ஈற்றுப்பாடலில் பாடினர்.

வள்ளிமலை வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருவலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வடக்கே ஒன்பது கல் தொலைவில் உள்ளது. மலேயை வல்ம் வந்தும் வழி படலாம்.

இதுவரையில் ஆறுமுகப் பெருமானது ஆறுபடை வீடுகளைப்பற்றிப் பேசினேம். அவனுக் குரிய பதிகள் எங்குமானலும் நமது வாழ்நாளில் இந்த ஆறுபடை வீடுகளையேனும் நேரில் கண்டு வணங்குதல் இன்றியமை யாதது.

வணங்குவதால் அவன் நமது உள்ளத்தில் குடி கொண்டு திருவருள் புரிபவன் என்பதைக் குமரகுருபரர்,

ஆறு திருப்பதிகண் டாறெழுத்தும் அன்பினுடன்

கூறுபவர் சிந்தைகுடி கொண்டேனே என்றருளினர். அல்லது இருந்த இடத்திலிருந்தாகிலும் துதித் திடல் வேண்டும். இதுவே அருணகிரியார் கட்டளை என்பதை,

திருவாவி னன் குடி பங்காளர் எண்முது சீருரைத் திருவாவி னன்குடி வாளுர் பரங்குன்று சீரலைவாய் திருவாவி னன்குடி யேரகம் குன்றுதோ ருடல்சென்ற திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே என்னும் கந்தர் அந்தாதி மூலம் அறிவித்துக் கொண்டு முடிக்கின்றேன்.

அடிக்குறிப்பு: திருஆவி-இலக்குமியின் உயிரான திருமால்,

நன்குடி-பார்வதி, சதிர். சதுரப்பாடு, உவாவினன்-இளைஞளும் முருகன், அதிர்-முழங்கும், உவா. யானை, இனன். கூட்டம் விரை-பழமுதிர்சோலை.