பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுகன் அடியவர்கள்

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம் காரில் கதியன்றி வேறிலை காண்தண்டு தாவடிபோய்த் தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வமெல்லாம் நீரில் பொறியென்றறியாத பாவி நெடுநெஞ்சமே

மெய்யன்பர்களே !

இன்று பொருளாக இருக்கும் பொருள் ஆறுமா முகனது அடியார்களைப் பற்றிப் பேசுவதாகும். அடியவர் களின் பெருமை அளவிட்டுச் சொல்ல இயலாது. தொண் டர்தம் பெருமை சொல்லவும் அரிதே என்பர் ஒளவையார், இறைவனே அடியவர் பெருமை இத்தகையது என்பதை சுந்தரருக்குக் கூறும்போது,

பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப்

பெற்ருர் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்றும்

இல்லார் அருமையாம் நிலையில் நின்ருர் அன்பிளுல் இன்பம்

ஆர்வார் இருமையுங் கடந்து நின்ருர் இவரை நீ அடைவாய் என்று அருளிச் செய்துள்ளார்.

மாசி லாத மணிதிகழ் மேனிமேல் #. நீறுபோல் உள்ளம் புனிதர்கள் தசி குல்னத் திசையும் விளக்கினர் பேச ஒண்ணுப் பெருமை பிறங்கினர் எனறும,