பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினர் என்றும்,

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணிஅல தொன்றிலர் ஈர அன்பினர் யாதும் குறைவிலர் வீரம் என்னல் விளம்பும் தகையதோ என்றும் சேக்கிழார் தெரிந்து செப்பியுள்ளார். இவ்வாறன பெருமை அவர்கள்பால் செறிந்தும் மிடைந்தும் இருத் தலின்,

அன்பர்பணி செய்ய என ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலைதானே வந் தெய்தும் பராபரமே என்று தாயுமானவர் சாற்றியருளினர். இவ்வளவு பெருமைக் குரிய அடியவர்களைப் பற்றியும் நாம் அறிய வேண்டுவது கடமை அன்ருே?

அடியவர்கள் ஈசன் அடியவராகவும், முருகன் அடியவ ராகவும், திருமால் அடியவராகவும், தேவி அடியவராகவும், கணபதி அடியவராகவும் இருக்கின்றனர். ஈண்டு முருகப் பெருமானுடைய அடியவர்களைப் பற்றியே பேசுவோமாக.

முருகன் அடியவர்கள் என்பதல்ை, அருணகிரியார் குமரகுருபரர், சிதம்பர சுவாமிகள், இராமலிங்க சுவாமிகள் போன்ற அடியவர்களைப் பற்றிப் பேசப்போகின்றேனே என்றுசிலர் எண்ணக்கூடும். நான் இவர்களைப்பற்றி இங்குப் பேசப் போவதில்லை. இவர்களைப்பற்றிப் பல முறை பலர் பேச நீங்கள் கேட்டுள்ளீர்கள். ஆகவே, இரண்டாயிர ஆண்டு கட்கு முன்பு இருந்த சங்க காலத்து முருகன் அடியவர் களைப்பற்றியே இதுபோது உங்கட்குநினைவு படுத்த எண்