பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

வேண்டியதைத் தந்தருளவும், முறைப்படியும் மந்தி விதிப்படியும் அந்தணர்கள் செய்யும் யாகாதி காரியங்களுக் குத் தீங்கு நிகழாதிருக்கவும், அரிய பொருள்களை இருவழி களுக்கு அறிவித்துத் திசைகளை விளக்கமுறச் செய்யவும், பகைவர்களாம் அசுரர்களைக் கொன்று களவேள்வி புரிய வும், வள்ளி அம்மையாருடன் இன்புற்றுக் கொஞ்சி விளையாடவும் முருகளும் பரமன் ஆறு திருமுகங்களைக்

கொண்டான்' என்பதாம்.

குமரகுருபரர் ஆறு திருமுகங்களைப் பற்றிய குறிப் புக்களைக் கூறுங்கால்,

வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து தெவ்வர்உயிர் சிந்தும் திருமுகமும்-எவ்வுயிர்க்கும் ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்பம், வாழ்வுதரும் செய்ய மலர்முகமும்-சூழ்வோர் வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும்-விடுத்தகலாம் பாச இருள் துரந்து பலகதிர் சோதிவிடும் வாச மலர்வதன மண்டலமும்-நேசமுடன் போக முறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியும்-தாகமுடன் வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளும் தெய்வமுகத் தாமரையும்

என்றனர். இதன் பொருள் 'பகைவர் உயிரை மாய்க்கவும் உயிர்கட்கு நல்வாழ்வு தரவும், வேதாகமப் பொருளை முற் றுப்பெறச் செய்யவும், அஞ்ஞானத்தை ஒழித்து, மெஞ் ஞானத்தை மக்களுக்கு உணர்த்தவும், வள்ளி நாச்சியார்ச் கும், தெய்வயானை அம்மையார்க்கும் இன்பம் அளிக்கவும், தன்னடியினை வந்தடைந்த அன்பர்கட்கு வரம் பல அருள் வும் முருகன் ஆறு திருமுகம் கொண்டான்' என்பதாம்.