பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றுமுகன் அடியவர்கள் 89

னியுள்ளேன்.அவர்களுள்ளும் நக்கீரராகிய சங்கப்புலவரைப் பற்றியும் இங்குப் பேச முன்வரவில்லை. அவர் திருமுரு கனைப் பற்றிப் போற்றிப் பாடிய திருமுருகாற்றுப் படை யினை அறியாதவர் இருக்கமுடியாது. திருமுருகாற்றுப் படையினை அறிந்தவர் நக்கீரரை அறியாமல் இருக்க முடியுமா? ஆகவே, நக்கீரரையும் நீக்கி வேறு சில முரு கன் அடியவர்களைப் பற்றிய பேச்சே ஈண்டுச் சிந் தனைக்கு உரியதாகும். அவர்கள் ஆசிரியர் நல்லந்துவளுர், கடுவன் இளவெயினனர், குன்றம் பூதனர், கேசவளுர், நப்பண்ணளுர், நல்லச்சுதளுர், நல்லழுசியார் என்பவர்கள். மேலே குறிப்பிடப்பட்ட ஏழு அன்பர்களும் முருகப் பெருமான் மீது அன்புகளிைந்து பாடல்களைப் பாடியுள்ள னர். அப்பாடல்கள் சங்கநூற்கள் வரிசையினைச் சார்ந்த எட்டுத் தொகையில் ஒன்ருன பரிபாடல் என்னும் நூலில் உள்ளன. எட்டுத் தொகை நூல்கள் இன்ன என்பதை,

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ ருெத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந் தார் சொல்லும் கலியோ டகம்புறம்என் றித்திறத்த எட்டுத் தொகை என்ற வெண்பாவால் தெரிந்து கொள்ளலாம். இத னுள் ஒங்கு பரிபாடல் எனச் சிறப்பிக்கப்பட்டதையும் சிந் தித்தல் வேண்டும். இதல்ை பரிபாடல் என்னும் நூல் சிறந்த நூல் என்பது தெளிவாகின்றதன்ருே?

பரிபாடல் என்பது பரிபாடல் என்னும் பாவில்ை பாடப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும். இது பரிபாட்டு எனவும் கூறப்பெறும். பரிபாடலாவது இசைப்பாவாகும். இவ்வாறு பொருள் கண்டனர் இந்நூலுக்கு உரை வகுத்த பரிமேலழகர். பரிபாடலாவது பரிந்த பாட்டு என்பது இளம்பூரணர்கருத்து. உளம்கூர் பெருமை இளம்பூரணர்