பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

தொல்காப்பியத்துக்கு உரைகண்ட பெரியார். அவர் பரி பாடல் இன்னது என்பதை விளக்கும்போது, "பரிந்த பாட்டுப் பரிபாட்டு எனவரும்; அஃதாவது ஒருவெண்ப்ாவா லாகி வருதலின்றிப் பல உறுப்புக்களோடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது' என்றனர். பேராசிரி யரும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர். அவர் 'பரிபாடல் பரிந்து என்பது வருவது; அது கலியுறுப்புப் போவாது நான்கு பாவானும் வந்து பல அடியும் வருமாறு நிற்கும்என்று உணர்க' என்று விளக்கினர். மேலும் அவர் விளக்கம் தரும்போது, 'அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களுள் இன்பத்தையே அடிப்படையாகக் கொண்டு கடவுள் வாழ்த்து மலை, புனல் விளையாட்டு முதலானவற்றில் இப்பாடல் வரப்பெறும்’ என்பர். உச்சிமேற் புலவர் கொள் நச்சிஞர்க்கினியர், 'கடவுள் வாழ்த்து உட்பட இன்பப் பொருள் குறித்து உல கியல் பொருந்தப்பெற்று வரும்' என்பர். யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் "தெய்வமும்காமமும் பொருளாகக் கொண்டுவரும்' என்பர். இத்தகைய உரையாசிரியர்களின் கருத்தினல் பரிபாடல் தெய்வ வாழ்த்துக்குரிய பாடல் என்பது பெறப்படுகிறது.

பரிபாடலில் எழுபது பாடல்கள் இருந்தனவாக இறையனர் களவியல் உரையாலும் தொல்காப்பிய உரை யாலும் தெரிகிறது. அவற்றுள் எட்டு திருமாலுக்கும், இருபத் தொருபாடல் முருகப் பெருமானுக்கும், ஒன்று காடுகிழாருக்கும், இருபத்தாறு பாடல்கள் வையை ஆற்றிற்கும், நான்கு மதுரைக்கும் உரியனவாகும் என்பது,

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று-மருவிய வையைஇரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடல் திறம்