பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳ይ கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

முருகப் பெருமான் தெய்வயானையை மணந்த திருப் பூதி திருப்பரங் குன்றம் ஆதலின், அம் மணக்கோலத் தைக் கண்டுகளிக்க, தேவர்களும் முனிவர்களும் அவுணர் களும் ஒன்று கூடியதல்ை அஃது இமயம் போன்றது என் கிருர். இறைவன் உமையம்மையினை மணந்த ஞான்று தேவர்களும் மற்றும் யாவர்களும், இமயம் சேர்ந்தனர் அல்லரோ? அதுபோல் அவ்விறைவர்தம் திருமகளுர் திரு மணத்திற்கு தேவர்களும் மற்று யாவர்களும் வந்து ற்றனர்; வந்தவர்கள் யார் யார் என்பதை ஆசிரியர் நல்லந்துவளுர்,

மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப் புண்மிசைக் கெர்டியோனும் புங்கவம் ஊர்வோனும் மலர்மிசை முதல்வனும்மற்றவனிடைத் தோன்றி உலகிருள் அகற்றிய பதின்மரும் இருவரும் மருந்துரை இருவரும் திருந்துநூல் எண்மரும் ஆதிரை முதல்வனில் கிளந்த நாதர்பன் ஒருவரும் நன்றிசை காப்போரும் யாவரும் பிறரும் அமரரும் அவுனரும் மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும் பற்ரு கின்று நின் காரண மாக என்று காட்டினர். புண்மிசைக் கொடியோன்-திரு மால். புங்கவம் ஊர் வோன்-இறைவன். மலர்மிசை முதல் வன்-பிரமன். பதின்மர் இருவர்-பன்னிரு சூரியார். மருந் துரை இருவர்-மருத்துவர் இருவர்.எண்மர்-அஷ்டவீசுக்கள். நாதர் பன் ஒருவர்-உருத்திரர் பதினொருவர். திசை காப்போர்-அஷ்ட திக்குப் பாலகர். விழுத்தவ முதல்வர்தெய்வமுணிகள். யாவர்களும் பேணிவணங்கும் பெற்றியது திருப்பரங்குன்றம் என்பது ஆசிரியர் கருத்து.

உடம் புணர்காதலரும் அல்லாரும் கூடிக் கடம் பமர் செல்வன் கடிநகர் பேண என்ற அடிகளில் இந்த உண்மையினை உணரலாம்.

திருப்பரங்குன்றம் இமயம் ஒக்கும் என்று கூறிய ஆசிரியர், அங்குள்ள சுனே இமயத்துச் சரவணப்