பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுகின் அடியவர்கள் 28 பொய்கை போன்றது என்பர். மலையில் மேகம் அதிர அவ்வதிர் குரலைக் கேட்ட சேவல் எதிர் கூவ, அவ்வோ சையைக் கேட்டயானே முழக்கம் செய்ய, ஒரே ஒசையுடைய தாக மிளிறும் அம்மலே என்றும் ஆசிரியர் பாடியுள்ளார். மலர்கள் மலர்ந்து வண்டுகள் ஒலிக்க இன்பம் தரும் காட்சி யாகப் பரங்குன்றம் விளங்குவதை,

வீழ்தும்பி வண்டொடு Dமிருர்ப்பச் சுனைமலர்க் கொன்றை கொடியினர் ஊழ்ப்பக் கொடிமலர் மன்றல மலர மலர்காந்தள் வாய்நாற நன்றவிழ் பல்மலர் நாற நறைபனிப்பத் தென்றல் அசைவரூஉஞ் செம்மற்று என்றனர்.

திருப்பரங் குன்றத்தில் வழிபடும் மாதர்கள் கேட்ட வரங்கள் இன்னின்ன என்பதை ஆசிரியர் அழகுபடக் கூறு கிருர். அவர்கள் தங்கட்கு நல்ல பிள்ளைப்பேறு கிடைக்க வயிறு வாய்க்கவேண்டும் என்றும், பொருள் பெருக வேண்டும் என்றும், தம் கணவர் போரில் வெற்றி காண வேண்டும் என்றும் வேண்டினர்களாம்.

கருவயிறு உருகெனக் கடம்படு வோரும் செய்பொருள் வாய்க் கெனச் செவிசார்த்து வோரும் மையமர் அடுகென அருச்சிப் போரும், என்ற அடிகளை காண்க.

ஆசிரியர் நல்லந்துவர்ை முருகனிடத்துக் டுள்ள அன்பினையும் அவனே முதன்மையான தெய்வம் என்பதை உணர்ந்தமையினையும் 'முதல்வ' என்று விளித் திருப்பதாலும்,‘குன்றம் உடைத்த ஒளிர்வேலோய்' என்ற தலுைம், தேவர்கள் பலர் பரங்குன்றை அடைந்தனர் என முன்பு கூறியிருப்பதலுைம் தெரிந்து கொள்ளலாம்,

கொண்