பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

இவர் முருகனை வாழ்த்தும் முகத்தான் திருப்பரங் குன்றையே வாழ்த்துகின்ருர். இவர் வாழ்த்திய வாழ்த்து,

மறுமிடற் றண்ணற்கும் மாசிலோள் தந்த நெறிநீர் அருவி அசும்புறு செல்வ! மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா தண்பரம் குன்றம் நினக்கு என்பது இதற்கு விளக்கம் காட்டிய பரிமேலழகர், 'முருகற் கிடமாகிய பரங்குன்றை வருணித்த முகத்தால் எதிர் முக மாக்கியும் படர்க்கை யாக்கியும் அவனையே வாழ்த்தி முடித்தமையின் கடவுள் வாழ்த்தாயிற்று' என்றனர். இவ்வாறு இறைவனைச் சின்னுள் வாழ் பல்பிணியுடைய சிற்றறிவினர் வாழ்த்துவது இவ்விறைவன் வாழ்வதற்கு அன்று. அவனே அனைவர் நல்வாழ்விற்குக் காரணகுய் இருக்க, அவனே மக்கள் வாழ்த்துவது என்ருல் அது விந்தை அன்ருே ஆல்ை, மணி மொழியார் இவ்வாறு இறை வஜன அவனது அடியார்களும் மற்றும் உள்ளவர்களும் வாழ்த்துதற்கு ஏற்ற காரணங் காட்டுகிருர்.

வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்

நின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழ

வேண்டிச் குழத்துமது கரமுரலும் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான்யானும் உன்னைப் பரவுவனே என்ற திருவாசகத்தைக் காணவும்.

ஆசிரியர் நல்லந்துவனர் திருப்பரங் குன்றத்தை வாழ்த்தி முடித்திருப்பதில் ஒரு குறிப்புக்காணப்படுகிறது. இதஞல் அம் மலே வாழ்வை இவர் பெரிதும் விரும்பினர் என்பது புலப்படுகிறது. இவர் திருப்பரங்குன்றத்தைப் பாடியதை இவரை ஒத்த பெரும்புலவராகிய மதுரை மருதன் இளநாகனர்,