பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுகன் அடியவர்கள் 75

சூர்மருங்கறுத்த சுடர்இலைநெடுவேல் சீர்மிகு முருகன் தண்பரங் குன்றத் தந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை யின்றிம் பைஞ்சுனை என்று பாடியிருப்பதை அகநானூற்றில் காணலாம். கடுவன் இளவெயினஞர்

இவர் பாடிய பாடல்கள் பரிபாடலில் மூன்று உள்ளன. அவற்றுள் இரண்டு திருமாலுக்கும், ஒன்று முருகப் ப்ெரு மானுக்கும் உரியவை. இவர் இருவர் மீதும் பாடியுள்ள பாடல்களால், இவ்விரு தெய்வங்களிடத்தும் பேரன்புடைய வா என்பது பெறப்படுகிறது. இவரது பெயர் எயினனர் என்று அறியவருதலின், இவரது மரபு வேடர் மரபாக இருக்கக் கூடும் என்பது புலகிைறது. வேடர் குலத்தில் பிறந்த திண்ணனர் இறைவன் மாட்டு அன்பு கொண்டது போல், இவர் இவ்விரு தெய்வங்களிடத்து அன்பு கொண் டனர் போலும்!

இவரது பாடல், யானை முருகற் குரிய வாகனம் என் பதையும் அவனே சூர்மா தடிந்தவன் என்பதையும் கிரெளஞ்சமலையைப் பிளந்தவன் என்பதையும் குறிப்பிட்டுச் செல்கிறது. முருகக் கடவுள் நிறம் சூரியனைப் போன்று ஒளியுடையது என்பதை ஞாயிற்றேர் நிறத்தகை என்ற தொடரால் குறிப்பிட்டுள்ளார். இது,

உலகம் உவப்ப வலன்ஏர் புதிரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி, என்னும் நக்கீரர் வாக்கை நினைப்பிக்கின்ற தன்ருே? இவர் முருகனைச் சால்வதலிங் என்றும் "நீயேவரம்பிற்று இவ்வுலகம் ஆதலின் சிறப்போய்’ என்றும் கூறி முருகனது. பெருமையினைப் பேசியுள்ளார். இந்த அளவுடன் நின்ற