பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

னரோ இவர்? பெரும் பெயர் முருக என்றும் அன்ருே பேசினர்! பெரும்பெயராவது பெரும் பொருள். பெரும் பொருள் இன்னது என்பதை விளக்கும்போது நச்சிஞர்க் கினியர் வீடு (மோட்சம்)என்று கூறினர்.இதல்ை மோட்சம் அளித்தற்குரியன் முருகன் என்பது தெரிகின்றதன்ருே ?

கடுவன் இளநாகனர் முருகனை அடைந்து இன்புறு வோர் இன்னர் என்பதையும், அடைந்து இன்புருதவர் இன்னர் என்பதையும் தெளிவுறத் தெரிந்துள்ளார். அடைந்து இன்புறுவோர்,

நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோ அல்லதை மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை என்றும், இன்புருதவர்,

செறுதி நெஞ்சத்துச் சினநீடி ைேரும் சேரா வறத்துச் சீரி லோரும் அழிதவப் படிவத் தயரி யோரும் மறுபிறப் பில்லெனும் மடவோரும் சேரார் என்றும் சுட்டிக் காட்டினர்.

இதல்ை அவன் திருவருள் பெறச் சினம் நீங்க வேண்டும் என்பதும், அறத்தொடு நின்ற அகம் வேண்டும் என்பதும், கூடா ஒழுக்கமும் அழிந்த தவவிரதமும் கூடா ள்ன்பதும், மறுபிறப்பு உண்டு என்ற உணர்ச்சி வேண்டும் என்பதும் பெறப்படுதலைக் காண்க.

கடுவன் இளவெயினனர் முருகப் பெருமானிடத்துக் கொண்டுள்ள அன்பினை என்னென்று இயம்புவது? அவர் உலகவாழ்வில் வெறுப்புக் கொண்டவராகவும் தெரிகிறது. அவர் முருகனிடத்தில் பொன்னேயும் பொருளையும் போகத் தையும் வேண்டிலர்; அருளையும், அன்பையும், அறனையுமே வேண்டினர்.இதனை,