பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுகன் அடியவர்கள் 77

பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருண் இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே என்று அவர் முருகனை வேண்டிய வேண்டுகோளால் தெளி யவும்.

உண்மை அன்பர்கள் இவ்வாறே வேண்டுவர் என் பதைக் கீழ்வரும் பாடல்களால் தெளியலாம்.

கோல நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன் மேலை இந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன் மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன் சால நின்பதத் தன்பையே வேண்டுவேன் தமியேன் என்று கந்தபுராணத்தும்,

அண்டர்பொய் வாழ்வையும் அயன் பொய் வாழ்வையும் விண்டுவின் வாழ்வையும் வெஃகி லேனியான் தண்டைகள் அணிந்தநின் சரணத் தன்பையே கொண்டிட வேண்டுவன் என்று கூறிஞன் என்று கந்தபுராணத்துச் சுருக்கத்தும் வீரபாகு தேவர் முருகனை வேண்டியதைக் காணவும். திருவாசகத்தில் மாணிக்கவாசகளுர்,

போகம் வேண்டி, வேண்டி லேன்பு ரந்தராதி இன்பமும் ஏக நின்க ழலிணைய லாதி லேன்என் எம்பிரான் ஆகிம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக்கனே ஆக என்கை கண்கள் தாரை யாறதாக ஐயனே என்று விரும்பியதைக் காண்க.

இவரது பாடலில் வரும்.முருகனது பிறப்பிற்கும்.கந்த புராணத்துக் கூறப்படும் முருகனது பிறப்புக்கும் பெரிதும் வேறுபாடு உண்டு. அவற்றை அவ்வந்நூற்களில் கண்டு கொள்ளவும்.