பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ነ8 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

குன்றம் பூதனர்

இவர் முருகன் மீது பாடிய பாடல்கள் இரண்டு பரி பாடலில் உள்ளன. இவரது பாடலால் இவர்க்குத் தமிழ் மொழியினிடத்துள்ள பற்றும் திருப்பரங் குன்றத்தின் மீதுள்ள அன்பும் புலனுகின்றன. தமிழின் சிறப்பைக் கூறுமிடத்தில் நான்கு வேதங்களை அறிந்த புலவர்களை நோக்கிக் கூறுகிருர். இதல்ை வேதங்களினும் தமிழே சிறப்புடைத்து என்பதை அவர் கடகு அறிவுறுத்தவே

நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் தள்ளாப் பொருள் இயல்பில் தண்டமிழ்ஆய் வந்திலார் கொள்ளார்.இக் குன்று பயன் என்று இங்ங்னம் கூறினர் என்பது தொனிக்கும் குறிப் பாகும்.

இவர் முருகனை வாழ்த் தி வணங்கியதை, நயத்தகு மரபின் வியத்தகு குமர வாழ்த்தினேம் பரவுதும் என்று பாடிப்பரவியதால் அறியலாம்.

இவரது பாடலில் சக்களத்திபோராட்டம் நன்கு சித் திரிக்கப்பட்டுள்ளது.முருகன் தெய்வயானை காலில் விழுந்து வணங்குவதும் கூறப்பட்டுள்ளது. இப்படி வணங்கிய தால் தெய்வயானை தன் மார்பை ஈந்து மகிழச் செய்த செய்தியும் அறிவிக்கப் பட்டுள்ளது.

திருந்தடி தோயத் திரைகொடுப் பானை வருந்தல் என அவற்கு மார்பளிப் பாளை என்ற அடிகளைக் காண்க.

வடிவார் குறத்தி தன்பொன் அடிமீது நித்த முத்தன் முடியான துற்று கந்து பணிவோனே