பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் பெருமை 7.

அருணகிரிநாதர் ஆறுமுகங்களின் பெருமை இன் னது என்பதைப் பாடுங்கால், 'ஆதியொடும் அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம்’ என்று பாடிப் பரவினர்.

சிதம்பர சுவாமிகள், ஆறுசமயக் கடவுளும் வேறு வேறு இன்றி யான் ஒருவனே அங்கங்கே இருந்து அன் பர்க்கு முத்தி தரும் வித்து-என்று அறிவித்த வதனம்’ என்று இனிது எடுத்து ஒதினர். இந்த அளவோடு இன்றி அவரே,

"பேறு தரும் தெய்வம் யவைக்குாம் யான் பெருந் தேவன் என்றே வீறுமுகம் கொண்டு போருர்முருகன் விளங்கியதே' என்றும் பாடிப் பரவியுள்ளார்.

“கீறும் வைவேல் பெருமான் முகம் ஆறும் கிளத்தும் எல்லாக்கடவுளும் ஓர் வடிவாகி இருந்தே' என்று வழுத்தும் ஆறெழுத்து அலங்காரம்.

“ஆறுசமயமும் தன்முகமாம் என்றறியும் அன்பர் வீறு சிந்தைக்கு இடைவீற்றிருக்கும் குகன்' எனக்கூறும் மயில் அலங்காரம்

ஆறுகொ லாம்அவர் தம்திரு மாமுகம் ஆறுகொ லாம்அவர் தோற்றிய ஓர் இடம் ஆறுகொ லாம்.அவர் தானமும் நூல்களும் ஆறுகொ லாம்அவர் மந்திரம் தாமே என்று பாடிப் பரவினர் ஒர் அன்பர். இதல்ை, அவர் திருமந்திரங்களான “சரவணபவ” “குமாராயநம என்பன வற்றை அன்பர்கட்கு உணர்த்தவும்தாம் ஆறு முகம் கொண்டார் என்றறிவோமாக. முருகப் பெருமான் திரு மந்திரம் ஆறெழுத்தால் ஆயது என்பது ஆறெழுத்தடக் கிய அருமறை' என்னும் நக்கீரர் வாக்கிற்கு உச்சிமேற் புலவர்கொள் நச்சினர்க்கினியர் உரை எழுதுங்கால், அது