பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுகன் அடியவர்கள் 81

பாமாலைக்கே நீதான் பட்சம் என்று நன்மா8லயா எடுத்துச் சொன்னர் நல்லோர்' என்று அறிந்து பாடினர்.

கேசவளுர் முருகப் பெருமானிடத்துக் கொண்டுள்ள அன்பு பெரிது. அவர் ஆறுமாமுகனை வழி படுதலேயே விரும்பி வரமாகக் கேட்டனர். அவர் கேட்டவரம்,

அன்னை ஆகலின் அமர்ந்தியாம் நின்னைத் துன்னி துன்னி வழிபடு வதன் பயன் இன்னும் இன்னும் அவை ஆகுக தொன்முதிர் மரபின் நின் புகழினும் பலவே. என்பது. இது குறித்தன்றே, சேக்கிழார் பெருமாருைம் தொண்டர்களின் வேண்டும் வரத்தைக் குறிப்பிடுகையில்

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினர். என்று விதந்து பாடினர்.

கப்பண்ணனர் :

இவர் முருகன் மீது ஒரே பாடலைப் பாடியுள்ளார். அது பரிபாடலில் இருப்பது. இவரது பாடலில் மதுரையில் உள்ளார் பற்பல ஊர்திகளில் வந்து பரங்குன்றை வணங்கிச் செல்வர் என்பது தெரிகிறது. அப்படி அவர்கள் வந்து வணங்குதலை ஆசிரியர் நல்ல உவமை நயத்தால் உரைத் தருளினர்.

அறம்பெரி தாற்றி அதன்பயன் கொண்மார் சிறந்தோர் உலகம் படருநர் போல என்பது அவ்வுவமை.

பாண்டியனும் தன் பரிவாரங்களுடனும் தன் மனைவி யருடனும் வந்து மலேயேறி வணங்குதலையும் குறித்துப் பாடியுள்ளார்.

மு.-6.