பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுகன் அடியவர்கள் 83

கள் சிலவற்றிற்கு இசை வகுத்த காரணத்தால் இவர் இசையிலும் வல்லுநர் என்பது தெரிகிறது. இவர் திருப் பரங்குன்றத்து அடியின் கண் வாழ்தலேயே வரமாக வேண்டுவதிலிருந்து இத்திருப்பரங்குன்றத்தினிடத்தும், முருகனிடத்தும் கொண்டுள்ள அன்பு இத்தகைத்து என் பது தெரிய வருகிறது.

குன்றத்து அடியுறை இயைகெனப் பரவுதும் என்ற அடியினைக் காணவும். இந்த வாழ்வு தமக்கு என்றும் இருக்க வேண்டும் என்பது அவரது பேரவா என்பது,

நன்னமர் ஆயமோடு ஒருங்குநின் அடியுறை

இன்றுபோல் இயை கெனெப் பரவுதும்

ஒன்ருர்த் தேய்த்த செவ்வநின் தொழுதே

என்று இவர் இறுதியில் தம் பாட்டில் இசைத்து இருப் பதால் தெளியலாம். மேலும், இவரது பாட்டின் வாயிலாக திருப்பரங்குன்றச் சிறப்பு அங்கு மகளிர் ஆடும் அழகு முதலானவைகளையும் அறிந்து இன்புறலாம்.

கல்லழுசியார் :

இவர் பாடிய பாடல்கள் இரண்டு பரிபாடலில் உள்ளன. அவற்றுள் ஒன்று வைகைக்கு உரியது. மற் ருென்று முருகனுக்கு உரியது. இவர் திருப்பரங்குன்றத்து வாழ்வைப் பெரிதாக மதித்தவர். அதனல் இங்கு வாழ்பவர் மேலுலக வாழ்வையும் விரும்பார் என்று விதந்து பாடு கின்ருர்.

மாலை மாலை அடியுறை இயைநர்

மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்

என்று வினவுகின்ருர்.