பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஷ்டி விரதம் 87

நாரதமுனிவர் விநாயகப் பெருமானிடம் சென்றுதாம் சப்த முனிவர்களிலும் மேம்பட்ட முனிவராக மதிக்கப் படுதற்குரிய முறையில் மேற் கொள்ள வேண்டிய விரதம் ஒன்றை அருளுமாறு வேண்டினர். அது போது விஞயகப் பெருமான் கார்த்திகை விரதத்தை மேற் கொள்ளுமாறு பணித்தார் என்பதை,

முன்னவன் அதனைக் கேளா முழுதருள் புரிந்து நோக்கி அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி பொன்ன் டி வழிபா டாற்றிப் ப்ொருவில்கார்த்திகைநாள்

நோன்மைப் பன்னிரு வருடம் காறும் பரிவுடன் புரிதி என்ருன். என்ற பாடலால் அறியல்ாம், இவ்வாறே மேற் கொண்ட நாரதர் சப்த முனிவர்களில் சிரேஷ்டராய்த் திகழ் வாராளுர்.

நாரதர் மட்டும் இந்தக் கார்த்திகை விரதத்தை மேற் கொண்டு தாம் விழைந்ததைப் பெற்ருர் என்ப தில்லை. மேலும், சிலரைக் குறிப்பிட வேண்டுமாயின், ஒரு பிராமணன் இதனை மேற்கொண்டு, அரசனுகப் பிறந்து அவனியை ஆண்டனன் என்பதையும் இவனைப் போலவே மற்றும் ஒர் அந்தணன் மேற்கொண்டு மனத்தில் நினைத்த யாவற்றையும் முடித்துக் கொண்டான் என்பதை யும், வேடன் ஒருவனும் வேந்தன் ஒருவனும் நோற்று, சந்திமான், வந்திமான் என்னும் பெயரைப் பெற்று உலக முழுமையும் ஆண்டனர் என்பனவற்றையும் குறிப் பிடலாம். இந்த விரதம் பலராலும் மேற் கொள்ளப் பட்டுப் பயன் தரும் அளவில் இருப்பதைக் கச்சியப்ப சிவாசாரியார்.

இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் நோற்று

முப்புவ ன்த்தின் வேண்டும் முறைமையைஅடைந்த நீரார் மெய்ப்படு தொகையை யாரே விளம்புவர்

என்று விதந்து பாடினர்.