பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

வசிஷ்டர் முசுகுந்தனுக்கு வெள்ளிக்கிழன்ம விரதம் கார்த்திகை விருதங்களை மட்டும் கூறியதோ டன்றிச் சஷ்டி விரத்தையும் மேற் கொள்ளுமாறு பணித் துள்ளார். அவ்விரதத்தைப் பற்றிக் கூறும் போது, 'ஒப்பரும் விரதம் வேறு ஒன்று உளது உரைப்பக் கேண்மோ” என்று கூறி இதனைத் தேவர்களும் முனி களும் மேற் கொண்டனர் என்பதை.

சொற்படு துலையின் திங்கள் சுக்கில பக்கம் தன்னின் முற்பகல் ஆதி ஆக மூவிரு வைகல் நோற்ருர் என்றும் கூறிஞர்.

இவ்வாறு கூறக்கேட்ட முசுகுந்தன் கந்த சஷ்டி விரத்தை மேற் கொண்டான். இவ்விரதத்தை மன்னன் மேற் கொண்டதல்ை மகிழ்ந்த முருகப் பெருமான், அவன் முன் தோன்றிக் காட்சி அளித்தான் என்பது. ஆன காலையில் ஆறுமா முகமுடை அமலன் கோன வன்தனக் கருளுவான் மஞ்ஞைமேல் கொண்டு தானை வீரனும் எண்மரும் இலக்கரும் சார வானுளோர்களும் கணங்களும் சூழ்வுற வந்தான் என்ற பாடலால் தெரியவருகிறது.

இது வரையில் முருகனுக்குரிய விரதங்கள் இன்னின்ன என்று கண்டோம். இனி அவ்விரதங்களை மேற் கொள் பவர் எம்முறையில் அவ்விரத நாட்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இதுபோது அறிதல் இன்றியமை

யாதது.

வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பவர், வெள்ளிக் கிழமை முற்றும் உணவை அகற்றி வியாழன், சனியாகிய, தினங்களில் பகலில் மட்டும் உண்டு வெள்ளிக்கிழமை மட்டும் உறங்காது இவ்விரத்தை அனுட்டிக்க வேண்டும் என்பது மரபு. இதனை,