பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

நமோ குமாராய என்பதாம் என்று விளக்கியிருப்ப தால் அறிய வருகிறது. இது நிற்க.

முருகன் என்னும் சொல் தெய்வத்தன்மை இளமை, அழகு, மணம் என்று பொருள்பட்டு நிற்றலைக் காணலாம். இதனை நச்சினர்க்கினியர் மதுரைக்காஞ்சி யில் வரும் முருகன் என்னும் சொல்லுக்குத் தெய்வத் தன்மை' என்று பொருள் தந்து எழுதியிருப்பதைக் கொண்டு தெளியலாம். நக்கீரர் 'என்றும் இளையாய் அழகியாய்' என்ற தல்ை முருகன் என்னும் சொல் லுக்கு இளமைப் பொருளும் அழகுப் பொருளும் இருத்தலேக் காண்க. மேலும், கமல மடமங்கை முருகப் பெருமானது வதனத்து அழகு காண்பள் என்றும், கரிய முகில் வண்ணனும் செங்கண் அழகு காண் பன் என்றும், முக்கண் மூர்த்தி அச்சொல்லின் பொருள் அழகு காண்பன் என்றும், உம்பர் வேந்து வேல் அழகு காண்பன் என்றும், அடியர் நின்று அடி அழகு காண்பர் என்றும், கெளரி உற்று நோக்கி முருகனது பின் அழகு காண்பாள் என்றும் அறிந்தோர் கூறுமாற்ருல் முருகன் அழகன் ஆதலேக் காணலாம். இப் பண்புகள் அனைத்தும் ஒருங்கே இயைந்தமையின் முருகன் பெருமை ஏற்ற முறு கின்ற தன்ருே?

முருகப் பெருமானது தெய்வத்தன்மைக்கு வேதங் களும் சான் ருய் நின்று சாற்றுகின்றன. வடமொழி வேதத்தின் முடிவு,

சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம் என் பதாக மும்முறை ஓதி முடிவதாகக் கூறுவர். நக்கீரர். முருகன் பெருமையினைத் தேவர்கள் அவனைக் காணக் குழுமி நிற்கும் நிலையினை விளக்கும் முகமாகவும் அறிவித் துள்ளார். அவர்,