பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஷ்டி விரதம் 89.

"ஞாயிறு முதலாம் நாளில் ஒன்றெனும் வெள்ளி முற்றும் உணவினைத்

துறந்து முன்பின் சென்றிடும் இரண்டு நாளும் திவாவினில் அடிசில் மாந்தி இன்துயில் அதனை நீத்து" என்று கூறியவாற்ருல் தெளிக.

கார்த்திகை நோன்பை மேற் கொள்பவர் பரணி நட்சத்திரத்தில் பின்னேரத்தில் ஒருவேளை உணவு கொண்டு, கார்த்திகை நட்சத்திரத்தில் ஆடையுடன் குளத்தில் மூழ்கி, பின் தூய ஆடைபுனைந்து, நியமத்து டன், ஐம்புலன்களை அடக்கி ஆசாரியன் திருவடிகளை வணங்கி, முருகனைவழிபட்டு, அவன் புராணத்தையும் பாராயணம் பண்ணிக் கையால் நீரை முகந்து பருகித் தருப்பைப் படுக்கையில் உறங்கி மாதர்களை அந் நாளில் இயமனுகமதித்து முருகனைத் தியானம் புரிந்து கொண்டு உறங்காது, அடுத்த உரோகிணி நட்சத்திரத்தில் சந்தியாவந்தனம் முடித்துக் கொண்டு (அதாவது கா8ல வழிபாடு) கந்தப்பெருமான் திருவடிகளை வணங்கி அடி யவர்களுடன், பாரணம் செய்து பகலில் உறங்காது முடிக்க வேண்டும். பகலில் உறங்கில்ை நூறு நல்ல பண்புடைய பிராமணர்களைக் கொன்றபாவத்திற்கு உள்ளா வர். இவற்றை எல்லாம் கந்தபுராம்டம் ஒழுங்குற,

துரசொடு கயத்தில் மூழ்கித் தூயிருெண் கலைகள் சுற்றி ஆசறு நியமம் முற்றி ஆன்றமை புலத்தன் ஆகித் தேசிகன் தனது பாதம் சென்னிமேல் கொண்டு

செவ்வேள் பூசனை புரிந்திட் டன்னன் புராணமும் வினவி ஞளுல் கடிப்புனல் அள்ளித் தன்னேர் கைகவித் துண்டு முக்கால் படுத்திடு தருப்பை என்னும் பாயலில் சயனம் செய்து மடக்கொடி மாதர் தம்மை மறலியா மதித்து வள்ளல் அடித்துணை உன்னிக் கங்குல்அவதியும் உறங்கா துற்ருன்