பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

என்று பயனைப் பாடிக் காட்டினர். எனவே, நாமும் கந்தவேள் விரதத்தினை மேற் கொள்வது முறையன்ருே? அவனுக்குரிய சஷ்டி விரத்தத்தை அனுட்டித்தல் சாலவும் சிறந்தது. இவ்விரதம் சாலச் சிறந்தது என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முன்பே இவ்விரதத்தைப் பற்றி விநாயகர் கூறுகையில் 'ஒப்பறு விரதம்' என்று ஒதியுள் ளார். ஐப்பசி மாதம் சுக்கில பட்சம், ஆரும் திதியில் தான் சூரன் மாண்டநாள். அவன் மாண்டதனுல்தான் விண்ணவர்தம் நிலையினைப் பெற நேர்ந்தது. விண் குடி புகும் நிலை வாய்த்தது. "பயிற்றும் இவ்விரதம் தன்னல் தாரணி அவுணர் கொண்ட தம்பதத்தலைமை பெற்ருர்' என்ற அடிகளைக் காணவும்.

தரபதுமன் கொல்லப்பட வேண்டியவன். அவன் மிகமிகக் கொடியவன். தேவர்களே அவன் படுத்தியபாடு சொல்லத் தரமன்று. அவன்,

சிற்சிலர் தமது நாவைச் செங்கையைச் சேதித் திட்டான் சிற்சிலர் துண்டம் தன்னைச் செவிகளைக் களைதல் செய்தான் சிற்சிலர்தானத் தோளைச் சென்னியைச் சேதிப் பித்தான் இந்த அளவில் நில்லாது தேவர்களைச் சிறையிலும் அடைத்தனன். மேலும் இவனது அட்டகாசத்தை அறை தற்கும் அச்சம் ஏற்படுகிறது. சூரபதுமன் தன் அரசை ஏற்று நடத்தும்போது தேவர்களை ஏவிப்பணி கொண்டது அம்மம்ம அத்துணை கொடுமையாக இருந்தது! தேவர் களில் எவரையும் விட்டுக் கொடுத்திலன். திருமா அல நோக்கி இவன்.

களித்திடும் நிமிறும் வண்டும் கலந்திட நறவம் மாந்தித் துளித்திடும் துழாய்மால் தன்னைச் சூரம்ைஅவுணன் பாரா அளித்தவன் தன்மு தாதை ஆயினை அதனுல் நின்னை

விளித்திடும் எல்லை தோறும் விரைந்திவண். மேவு

கென்ருன்