பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

பெருமான் அவனேடு போர்புரியத் தொடங்கினர். சூர&ன வென்ற ஆறுமாமுகனைவணங்கும் நிலையில் கச்சியப்ப சிவா சாரியார்.

மாயையின் வலியோ கிை மால் முதலோரை வென்றே ஆயிரத் தோர்எட் டண்டம் அரசுசெய் துகம் நூற் றெட்டு காயம தழிவின் ருகிக் கடவுளற் கலக்கண் செய்த தீயசூர் முதலைச் செற்ற குமரன்தாள் சென்னி வைப்பாம். என்றும்,

விரிஞ்சன்மால் தேவராலும் வெலற்கும் விரலோளுகிப் பெருஞ்சுரர் பதமும் வேத ஒழுக்கமும் பிறவு மாற்றி

அருஞ்சிறை அவர்க்குச் செய்தஅவு ணர்கோண்

வி கொள்வான்

பரஞ்சுடர் உருவாய் வந்த குமரனைப் பணிதல் செய்வாம் என்றும் துதிகவிகள் பாடிப் போற்றியுள்ளார்.

சூரபதுமனது இளவல் தாரகன் மீது திருமால் தனது சக்கா யுதத்தினை விட்டபோது, அது அவன் கழுத்தில் ஆரமாயிற்றே அன்றி அவனை அழிக்கவில்லை. தாரகன் அசுரன் கண்டம் தன்னை வந்தணுகிச் செம்பொன் ஆரமா யிற்று' என்ற அடியிஞல் அறியலாம். தாரகனே திரு மாலை அடக்கி வென்ருன் என்ருல், சூரன் மால் முதலோரை வென்ருன் என்பதும் மால் தேவராலும் வெலற்கரும் விறலோன் என்பதும் உண்மை அன்ருே:

இவ்வாறு, பல்லாற்ருலும் கொடுமை செய்து வந்தவன் சூரன் ஆதலின், அவனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டியது முறைமை என்று உளம் கொண்ட முருகன் அவளுேடு போர் புரியத் தொடங்கினன்.

அதுபோது சூரன், மாயிருள் உருவம் கொண்டு மறைந்து நின்று ஆர்க்கலுற்றன். விண்ணுேர் மெய்த் தொகை நுகர் வான் உன்னி விண்ணிடைக் கிளர்ந்து சென்ருன். இவ்வாறு சூரபதுமன் வருவதை உணர்ந்த தேவர்கள் தலைத்தலே சிதறி நில்லாது ஓடினர். ஒடியவர் கள் முருகப் பெருமா இன நோக்கி,