பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஷ்டி விரதம் ፵?

தண்ணினர்க் கிணியாய் ஒலம் ஞானேநாயகனே ஒலம் பண்ணவர்க் கிறையே ஒலம் பரஞ்சுடர் முதலே ஒலம் எண்ணுதற் கரியாய் ஒலம் யாவையும் படைத்தாய் ஒலம் கண்ணுதற் பெருமான் நல்கும் கடவுளே ஒலம் ஒலம் தேவர்கள் தேவே ஒலம் சிறந்தசிற் பரனே ஒலம் மேவலர்க் கிடியே ஒலம் வேல்படை விமலா ஒலம் பாவலர்க் கெளியே ஒலம் பன்னிரு புயத்தாய் ஒலம் மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஒலம் ஒலம் கங்குலின் எழுந்த கார்போல் கனஇருள் மறைவின் ஏகி நுங்கிய செல்வான் சூரன் ஓடவும் நோன்மை இல்லேம் எங்கினி உய்வம் ஐய இரையும்நீ தாழ்க்கல் கண்டாய் அங்கவன் உயிரை உண்டெம் ஆவியை அருளு கென்ருர் இவ்வாறு தேவர்கள் ஒலம் இட்டுவேண்டிய வேண்டு கோளை உணர்ந்த முருகப் பெருமான் கருணை கூர்ந்து தன் திருக்கரத்தில் உள்ள திருநெடும் வே8ல நோக்கி, 'இவன் ஆகம் போழ்ந்து வருகுதி' என்று கட்டளை இட்ட னர். சூசன் தன் மீது குமரன் வேல் வருதலை அறிந்து, 'முடிவிலா வரத்தினேனே என் இவன் செய்யும் அம்மா இவன் விடும் எஃகம்' என்று எள்ளி நகையாடிக் கடல் நடுவே மாமரமாக நின்றன். இவன் மாமரமாகி நின்ற நிலையினைப் பல படப்புனைந்த கந்தபுராணம்,

அத்தியின் அரசு பேர ஆலமும் தெரிக்கில் ஓங்க மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவும் தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோன் உய்த்திடு தனிவேல் முன்னர் ஒருதனி மாவாய் நின்ருன் என்று அழகுறப் பாடுகிறது. அதுபோது வேலனது வேல் விடம்பிடித் தமலன் செங்கண் வெங்களல் உறுத்திப்

பாணி இடம்பிடித் திட்ட தீயில் தோய்ந்துமுன் இயற்றி அன்ன உடம்பிடித் தெய்வம் இவ்வாறுருகெழு செலவின் ஏகி. மடம்பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே மு.-7.