பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




உன்னை வரவேற்கிறேன்.

என்னை மீண்டும்
இசைக்க வைக்க வந்துள்ளாய்;
உன்னை வரவேற்கிறேன்.

நான் மகரயாழ்;
உன் மணிக்கரம்
தீண்டினால் போதும்.

என்னால்
உனக்குப் பெருமை வரும்;
உன்னால்
எனக்கு வாழ்வு வரும்.

உன்னை வரவேற்கிறேன்.

 

1

11