பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘உலகப்பன் பாட்டைப்’ படித்துவிட்டு
நிலத்தை மீட்கப் போனேன்.

நிலத்தைப் பறிக்கப் போகிறேன்
என்று என்னைக்
கைது செய்தார்கள்

என் புரட்சி வாய்ந்த
மனத்தைப் பறித்துப் போகிறாயே -
இந்த நாட்டுச் சட்டம்
உனக்குச்
சாதகமாகத் தானே இருக்கிறது!

 

7

17