பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்எழுதுகோல்
வெறும் எழுதுகோல் அல்ல.


தேசம் தழுவும்
பொதுவுடைமைக்கு
வரவேற்புரை எழுதும் போதும்

தேகம் தழுவும்
உனக்கு-
என் தனியுடைமைக்கு -
வாழ்த்துரை எழுதும்போதும்

என் எழுதுகோல்
வெறும் எழுதுகோல் அல்ல.



 

21

35