பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


உலக மொழிகள் அனைத்திலுமுள்ள
உயர்ந்த கவிதைகளைத்
தேடி எடுத்துப் படித்துள்ளேன்.

என்றாலும்
எனக்குப் பிடித்த கவிதை
உன் பெயர்தான்!

வையப் புகழ் வாய்ந்த
ஒவியர்கள் வரைந்துள்ள
சிறந்த சித்திரங்களை
விரும்பி வாங்கிப் பார்த்துள்ளேன்;

என்றாலும்
எனக்குப் பிடித்த சித்திரம்
உன் முகம்தான்!

 

22

36