பக்கம்:கனவுப்பாலம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கனவும் பாலம்

விலை உயர்ந்த டை ஒன்றை வாங்கி கோபாலிடம் கொடுத்தாள்.

“இதற்குத்தான் விளையாடினாயா? லாபம் கிடைத்ததா?”

“ஆமாம் .நாலாயிரம் யென்! அதற்கு ஒரு டை வாங்கிவிட்டேன். நீங்கள் இந்த ‘பச்சிங்க்கோ’விளையாட்டு பார்த்ததில்லையே....!”

“டை வாங்கித் தருவது உங்களூர் வழக்கமா?”

“ஆம்; ஒரு பெண் ஒருவனுக்கு டை வாங்கித் தருகிறாள் என்றால் அவனை அவளுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம்!”

“அப்ப...?” மனதில் கேட்டுக் கொண்டான்.

கோபால் தன் ஓட்டலுக்குத் திரும்பிய போது மணி பதினொன்று. ஜப்பானியர்கள் குளிக்கிற நேரம். களைப்போடு கட்டிலில் அமர்ந்தான். அந்த டையை எடுத்து ஆசையோடு முத்தமிட்டான்.

அயாகோவின் சிரிப்பொலி அவன் காதுகளில் ஒலித்தது. கூந்தலை ஒதுக்கி விட்டுக் கொள்ளும் நளினம் கண்களில் தெரிந்தது. ஷூ கழற்றி, ஸாக்ஸ் கழற்றி லுங்கி அணிந்து, க்ரீன் டீ தயாரித்துக் கொண்டிருந்தபோது டெலிபோன் மணி ஒலிக்கவே ‘யாராயிருக்கும்?’ என்ற கேள்வியுடன், ரிஸீவரை எடுத்தான். அயாகோ பேசினாள்.

“பர்ஸை எங்கள் கடையில் மறந்து விட்டுப் போய் விட்டீர்களே! இதில் உங்கள் போட்டோ இருக்கிறது; அத்துடன் கற்றை கற்றையாய் 'யென்' நோட்டுகள் இருக்கின்றன. காலையில் கொண்டு வந்து தரட்டுமா? கவலைப் படாமல் நன்றாகத் தூங்குங்கள். குட்நைட்! ஸ்வீட்ட்ரீம்ஸ்!” என்றாள். அப்படிச் சொன்ன அயாகோ மட்டும் அன்றிரவு தூங்கவில்லை. அவளுக்குத் தூக்கம் வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/10&oldid=1323526" இலிருந்து மீள்விக்கப்பட்டது