பக்கம்:கனவுப்பாலம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி H.9% அழகும் அமைதியும் சூழ்ந்த அந்தத் தீவில் தொழிற். சாலைகள் இல்லை. புகை போக்கிகள் இல்லை. பைன். மரங்களும், செர்ரி மரங்களும் காற்றும் நீரும் கெட்டுப் போகவில்லே. - - - கடற்கரை ஓரங்களில் நீலமும் சிகப்பு மாய்க கூரை வீடுகள். உல்லாசப் பயணிகளுக்கென இரண்டொரு. ஒட்டல்கள். நகர்ப்புரத்து அட்டகாசங்கள் எதுவு மில்லாத எழிலார்ந்த தீவு. - கோபால் அந்தத் தீவின் எதிர் காலத்தை ஒரு நிழிடம் கனவாக எண்ணிப் பார்த்தான். -- - - டிப்கோ நிறுவனம் அங்கே இயந்திரக்கால் ஊன்றுகிறது. ஜிப்புகள், டிரக்குகள், டிராக்டர்கள் பெரிய பெரிய ராட்ச்தக் குழாய்கள், புகை போக்கிகள் அத்தனேயும் பலத்த மூச்சுகள் விடுகின்றன. டிப்கோ நிறுவனத்துக்குச் சொந்தமாக ஒரு கட்டிடம் எழுகிறது. அதன் பதிருைவது மாடிக்கு கோபால் லிப்டில் உயர்கிருன்; அங்கே போய் உயர்ந்த பதவியில் ஆழர்கிருன். அந்த உயரத்திலிருந்து கடற்கரை ஓரங்களில் ஆயிலுக்காகத் தவம் கிடக்கும். பெரிய பெரிய கப்பல்கள் வரிசையாக நிற்பதைப் பார்க் கிருன். - கிேஜிமா இந்தக் கனவை நினைவாக்கு வாளா? இருவரும்.நடந்து கடற்கரைக்குச் சென்றர்கள், திடீரென்று பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சிவப்பாய் ஒரு.பெரிய வட்டப் பந்து கவிழ்ந்து சென்று கடலே முத்தி மிடத் தொடங்கியது. கடல் முழுவதும், நீர்ப்பரப்பு முழுதும், அஸ்தமன சூரியனின் பொன்னிற ஜாலம்! கோபால் இந்த அழகைப் பார்த்தீர்களா? இதையா, கெடுக்கப் பார்க்கிறீர்கள்? அது ஒரு நாளும் நடக்காது. என் உயிர் உள்ளவரை இந்தத் தீவுக்குள் எந்தத் தொழிற். சாலேயையும்.நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று சற்று. ஆவுேசழாகவே பேசி விட்டாள் கிஜிமா -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/17&oldid=768609" இலிருந்து மீள்விக்கப்பட்டது