பக்கம்:கனவுப்பாலம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவி 28 கீழே விழக்கூடிய, அளவுக்கு இதில் பயப்படி ஒன்று மில்லை’.என்று எண்ணிக் கொண்டார் இன்னொரு அதிகாரி, . கிஜிமா அறையிலிருந்து கீழே விழுந்திருந்தால், அல்லது தள்ளப்பட்டிருந்தால், அவள் அந்த அறையிலிருந்துதான் விழுந்திருக்கிருளா என்பதை நிச்சயப் படுத்திக் கொள்ள விழுந்த கோணம் சரியாயிருக்கிறதா என்று பார்த்துவிட்டுப் பிறகு கிஜிமாவைச் சுற்றிலும் கோடு போட்டார்கள். அவளுடைய கைப்பையைச் சோதித்து கிஜிமர்வின் போட்டோ, வயது, மிட்ஸ்அயோ ஸ்டோர் விலாசம், டெலிபோன் நம்பர், அன்றைய பொருளாதாரம் அவ்வள வையும் தெரிந்து கொண்டனர். இதெல்லாம் முடியும்போது மணி 8.40. இதற்குள் ஸ்கூரா இயக்கத் தலைவி கிஜிமாவின் அகாலமரணச் செய்தி அந்தத் தீவு முழுவதும் பரவி அதிர்ந்து அந்த அதிர்ச்சி டோக்கியோவைத் தொற்றிக் கொண்டிருந்தது. மிட்ஸஅயோ கடை கெடியாரத்தில் மணி 8.45. அயாகோ அப்போதுதான் கடையைத் திறந்து தூசு தட்டிக் கொண்டிருந்தாள். வாசலில் வந்து நின்ற டிரக்கிலிருந்து ஆரஞ்சு உடையில் இரண்டு.பேர் இறங்கி வந்தார்கள். சில களும், ஜாடிகளும் மர பொம்மைகளுமாய்ச் சில ஹாண்டி கிராப்ட் சமான்களை வண்டியிலிருந்து இறக்கிக் கொண்டு வந்து கடைக்குள் வைத்தார்கள். அவர்களில் ஒருவன் அந்தச் சாமான்களின் பட்டியலே அயாகோ விடம் நீட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தான். அதே சமயம் இன்ைெருவன் அங்கிருந்த டெலிபோனே எடுத்து, யுரிடமோ பேசிக்கொண்டே வண்டைக் காட்டிலும், சிறிதான ஒருமைக்ரோ போன் கருவியை அதில் பதித்து விட்டுப்.பரமசாதுவாக வாசலில் போய் சிகரெட் பற்ற வைத்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/21&oldid=768613" இலிருந்து மீள்விக்கப்பட்டது