பக்கம்:கனவுப்பாலம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி . 29 காட்டினன். பிறகு அவர்களே மாடிக்கு அழைத்துச் சென்றன். 76-ம் நம்பரில் தங்கியிருந்த அமெரிக்கள் கெய்ஷா அழகி ஒருத்தியை நிர்வாணமாக்கி, தோல் உரித்த சாத்துக் குடி போல் வைத்திருந்தார். போலீஸைக் கண்டதும் அந்தப் பெண் குதித்து ஓடி, படுக்கை விரிப்பை உருவித் தன்னே மறைத்துக் கொண்டாள். - அந்த அமெரிக்கர் முகத்தில் கொஞ்சம் அசடு தெரிந்தது. ஸோரி, ஸாரி!?? ஆங்கிலத்தில் வருத்தம் தெரிவித்துக் கொண்டே பின் வாங்கிய இன் ஸ்பெக்டர் தம் சக போலீஸ் அதிகாரியைப் பார்த்து, கோபால் என்பவன் நம்மை ஏமாற்றியிருக்கிருன். இந்த ஒட்டல் பெயர். ரூம் நம்பர் சொல்லி அயாகோவை நம்ப வைத்திருக்கிருன்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார். இேருக்கலாம்.?? முேதலில் கோபால் போட்டோவைப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வோம்.’’ - அவன் போட்டோ? *அமெரிக்காவிலுள்ள டிப்கோவைக் கேட்கலாம். போட்டோ அவர்களிடம் இருக்கும்.’’ கிஜிமாவும் அவனும் தங்கியிருந்த அந்தத் தீவு ஓட்டலில் ஏற்கனவே அவனைப் பற்றிய விவரங்கள் சேகரித்திருந்தார்கள். ஓட்டல் ஹில்டாப் பில் 990-ம் நம்பர் அறையில் காவலில் இருந்தான் கோபால். அந்த முரடர்கள் அவனுக் குத் தெரியாமல் அவனே கண்காணித்துக் கொண்டிருந் த்ார்கள். அப்போது மணி ஏழு. டோக்கியோவை இரவுப் போர்வை தழுவிக் கொண்டிருந்தது. கோபால் ஜன்னல் வழியாக வெளியே பார்த்த போது நகரம் மின்சாரப் பூச்சி களாய்ச் சிலிர்த்துக் கொண்டிருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/25&oldid=768617" இலிருந்து மீள்விக்கப்பட்டது