பக்கம்:கனவுப்பாலம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி

37

திருப்பி அனுப்ப முடியாது. அழைப்பை ஏற்காவிட்டால் பிறர். பணத்தைக் காரணம் இன்றி ஏற்றுக் கொண்டதாகும். : இரண்டாவது துப்பறியும் புத்தி, இதில் என்னதான் இருக்கிறது என்று பார்த்து விடலாமே என்கிற ஆவல்! கையெழுத்து ஒரு பெண்ணினுடையது போலிருப்பதால் இன்னொரு கவர்ச்சி. இவ்வளவு பெரிய ஓட்டலில் ஓர் இரவு என்பதில் எத்தனையோ சமாசாரங்கள் அடங்கியிருக்கின்றன. - மூன்றாவது இத்தனை ஆண்டு நிருபர் வாழ்க்கையில் அவனுக்கு இது ஒரு புது அனுபவம். இதில் ஏதோ பெரிய மர்மம் அடங்கியிருக்கிறது. பார்த்து விட வேண்டியதுதான் என்கிற துடிப்பு: ஒப்புக் கொண்டான், போன மாதம் யமூரிலாண்ட்' பத்திரிகை ஆசிரியர், ரிப்போர்ட்டர் கௌ தமையும் போட்டோகிராபரையும் அழைத்து உடனே 'ஓகி' ஐலண்டுக்குப் போய் கிஜிமா மரணம் பற்றிய விவரங்களைப் பூரணமாக விசாரித்து அறிந்து வரும் படி உத்தரவிட்டார். இருவரும் அங்கே போய் கிஜிமா இறந்த' அதே ஓட்டலில், ஐந்தாவது மாடியில் தங்கினர். பின்பக்கம் தோட்டத்தில் அவள் விழுந்து கிடந்த இடத்தையும், அவள் இறந்து கிடந்ததை முதலில் பார்த்த சிப்பந்தியையும் படம் - எடுத்துக் கொண்டார்கள், - கிஜிமாவின் வயது, அணிந்திருந்த கவுன் நிறம், கைப்பையி லிருந்த பொருளடக்கம், இவ்வளவையும், தெரிந்து - ' கொண்டார்கள். கடைசியில் அந்த ஓட்டலில் தங்கியிருந்த வெளி நாட்டுப் பயணிகளைப் பேட்டி கண்டு சம்பந்தமில்லாத பல தகவல்களையும் சேகரித்துக் கொண்டனர். ' ஆசிரியரிடம் போய் ( 'ஸகுரா' இயக்கத் தலைவி கிஜிமாவின் மரணம் இயற்கையானது அல்ல. இதில் பெரிய மர்மம் அடங்கியிருக்கிறது.. அவள் இறக்கும்போது அவள் கையில் எஸ். கே' என்ற - 'எழுத்துக்கள் பொறித்த கைக்குட்டை ஒன்று இருந்தது. எஸ்.கே. - என்பது அவள் குளடக்கம், அந்த ஓட்டலில் இந்த மில்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/33&oldid=1296517" இலிருந்து மீள்விக்கப்பட்டது