பக்கம்:கனவுப்பாலம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கனவுப் பாலம் விசாலமான அறை. ஆடம்பரமான அலங்காரங்கள் . வலது பக்கம் இன்ைெரு அறைக்கு வழி தெரிந்தது. இடது. பக்கம் மற்ருெரு அறை இருந்தது. எதிரில் பால்க்னி. கண்ணடித் தடுப்புகளுக்குப் பின்னல் நீலத் திரை கடல். கடலில் வெகு அருகாமையில் சிறுசிறு தீவுகள். நீந்தியே அந்தத் தீவுகளை அடைந்து விடக் கூடிய சமீபம்! ஹாலில் தலைக்கு மேலே உயரத்தில் சாண்ட் லியர்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன. வட்டமான மேஜை யைச் சுற்றிலும், ஆளே விழுங்கும் குஷன் நாற்காலிகள் ஐந்து. அவற்றில் ஏற்கெனவே நாலு பேர் உட்கார்ந்திருந் தார்கள். ஒன்று கெளதமுக்காகக் காத்திருந்தது. கெளதம் அவர்களைப் பார்த்து ஒர் அசட்டுச் சிரிப்புடன் அந்த ஐந்தாவது நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அவர் களில் யாரையுமே அவனுக்குத் தெரியவில்லை. எல்லாருமே. புது முகங்கள். ஒருவேளை தவருன அறைக்கு வந்து. விட்டேனே? - - திடீரென்று மூன்று பையன்கள் அறைக்குள் வந்தார்கள். அவர்களோடு விஸ்கி, ஷெர்ரி, பீர்! ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்து என்ன வேண்டும் என்று கேட்டு அவரவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து விட்டுப் போளுர்கள். மறுபடியும் மெளனம் அந்த மெளனத்தக்ை கலேக்கும் வகையில்பானம் உறிஞ்சும் மெலிதான ஒசை! கெளதமுக்கு எதிரில் கடோத்கஜன் மாதிரி'ஓர் ஆசாமி. பார்க்க மிடுக்காயிருந்தான். ஐம்பது வயது மதிக்கக்கூடிய தோற்றம். ஏதோ ஒரு ப்ெரிய கம்பெனியின் எக்ஸிக்யூடிவ். போலிருந்தான். - t அவனுக்குப் பக்கத்தில் ஒரு வாலிபன். இருபத்திரண்டு. வயது மதிக்கலாம். கூர்மையான மூக்கு முகத்தில் எந்த பர்வமும் இல்லை. கல்லூரி மாணவனைப் போலிருந்தான். கெளதமின் வலது புறத்தில் நாற்பது வயதில் ஓர் அம்மாள். மிக நாகரிகமான தோற்றம். விலயுயர்ந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/36&oldid=768629" இலிருந்து மீள்விக்கப்பட்டது