பக்கம்:கனவுப்பாலம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - கனவுப் பாலம் 7 அந்த இளைஞன் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்து *மணி ஏழு!’ என்று அலுப்புடன் கொட்டாவி விட்டான். மேலும் கொஞ்சம் பீர் குடித்தான். எநான் வீட்டுக்குப் புறப்படலாமா என்று பார்க்கிறேன்’ என்ற நாற்பது வயதுக்காரி தன் கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டாள். யோரோ நம்மைச் சரியான முட்டாளாக்கியிருக் கிருர்கள்’’ என்று சிரித்தாள் இருபது வயது மங்கை.

  • ஆயிரக் கணக்கில் பணம் செலவழித்து நம்மை இங்கே அழைத்திருக்கிறர்கள் என்ருல் அது சும்மா வேடிக்கை பண்ணுவதற்காக இராது’ என்றர் ஐம்பது வயதுக்காரர்.
ேசரி, அப்படின்கு எதுக்குக் கூப்பிட்டாங்க? கூப்பிட்டது யார்? அவர் எங்கே? இப்படி சும்மவோ உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி?’ என்று அலுத்துக் கொண்டாள் நாற்பது வயதுக்காரி.
ேஇந்த ஜப்பானில் எத்தனையோ கோடி பேர் இருக் காங்க. அதிலே நம்ம ஐந்து பேரை மட்டும் பொறுக்கிக் கூப்பிட்டிருக்காங்கன் ,ை அதிலே ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது. நம்ம ஐந்து பேருடைய பெயர், விலாசம், வயது அத்தனையும் கண்டுபிடிச்சு எழுதியிருக்கிருர்களே, அதில்தான் ம்ொத்த் ரகசியமே அடங்கியிருக்கிறது’ என்ருன் நிருபர் கெளதம். -

நம்ம ஐந்து பேரும் ஒருத்தருக் கொருத்தர் முன்பின் அறிமுகமில்லாதவர்கள். நம்மை எதுக்கு அழைக்கனும்? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? 'நமக்கே தெரியாமல் ஏதாவது இருக்கும்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/40&oldid=768634" இலிருந்து மீள்விக்கப்பட்டது