பக்கம்:கனவுப்பாலம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

お0 கனவுப் பாலம் தங்கினேன். ஒருவேளை ஓட்டல் ரிஜிஸ்டரைப் பார்த்து எழுதியவர் என் பெயரிலும் எஸ். கே. இருப்பதால் எனக்கும் அழைப்பு அனுப்பியிருக்கலாம். எனக்கும் இது ஆச்சரியம்தான்' என்றன் கெளதம். - 'நான் அன்று அந்த ஒட்டலில் தங்கியிருந்தேன். ஆல்ை எனக்கு எதுவுமே தெரியாது’ என்றர் ஐம்பது வயதுக்காரர். - - அந்த மாணவன் சிரித்தான். ஏன் சிரிக்கிறீங்க??? கெளதம் கேட்டான். இந்த அழைப்பு அனுப்பினவங்களுக்குக் கொஞ்ச மாவது புத்தி இருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள். நம்ம ஐந்து பேரில் யாராவது கொல செய்திருந்தால் இங்கே வந்திருப்போமா? குற்றவாளியைக் கண்டு பிடிக்கத்தான் இப்படி சூழ்ச்சி செய்கிருர்களோ என்று பயந்திருப்போமே! இதுகூடத் தெரியலேயே அவர்களுக்கு!’ என்ருன் மாணவன். அதுவும் ஒரு பாயிண்ட்தான். ஆல்ை அழைப்பு அனுப்பிய வங்க இதைப் பற்றி யோசிக்காமலா இருந்திருப் பாங்க? யார் இங்கே வரலேயோ, அந்த ஆசாமி பயந்து போய்தான் இங்கே வரவில்லை என்பது தெரிந்துவிடும். இல்லையா? ஒருவேளை அப்படி யாராவது வராமலிருக் இருக்களா என்று பார்ப்பதற்காகத்தான் இப்படி ஒரு: சூழ்ச்சி செய்திருக்கிருர்களோ, என்னவோ?’ என்ருன் கெளதம்.

அதுசரி; அதேமாதிரி தான் வரவில்லையென்றல் பயந்து போய்த்ான் வரவில்லே என்று நினைப்பார்களே’ என்று எண்ணிக்கூட எல்லோரும் வந்திருக்கலாம் இல்லையா? என்ருள் நாற்பது வயதுக்காரி. -

அதுவும் சரிதான்’ என்ருன் கெளதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/46&oldid=768640" இலிருந்து மீள்விக்கப்பட்டது