பக்கம்:கனவுப்பாலம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 59 'அது யாருடையது?

  • இத பாருங்க. அந்த ஆள் எப்படி இருப்பார்னு இதோ ஒரு படமே வரைஞ்சு காட்டிட்டார், கெளதம்!’ என்று படத்தை கோபாலிடம் காட்டிய இன்ஸ்பெக்டர் இந்த ஆளே நீங்க எங்கயாவது பார்த்த ஞாபகம் இருக்குதா?’ என்று கேட்டார்.

- கோபல் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான். சற்று யோசித்தான். . . r 'அ! இவனே அன்று அந்த ஒட்டல்ல பார்த்த ஞாபகம் இருக்குது. ஆமாம். இவனே தான்!” என்ருன். வெரிகுட்! இனிமேல்தான் நாம் வேலை செய்யனும். இப்ப இந்த கர்ச்சிப் யாருடையது என்று தெரிந்து போச்சு. யோக ஹாமாவிலிருந்து வந்திருந்தானே அந்த ஐம்பது வயதுக்காரன்! கம்பெனி எக்ஸிகியூட்டிவ்னு சொல்லிக்கிட்டு அவனுடையதுதான் இது. அந்த ஆசாமி அட்ரளலாம் இருக் குது. ரொம்ப நெருக்கத்திலே வந்துட்டோம்' என்ருர் இன்ஸ்பெக்டர். - - இன்றே யோகஹாமா போய் அந்த ஆசாமிக்குத் தெரியாமல் அவன் போகிற இடத்துக்கெல்லாம் அவனைத் தொடர்ந்து போய்ப் பார்த்துடனும். அப்ப தெரிஞ்சுடும் எல்லாம்?" என்ருன் கெளதம். - - எஸ்! நானே இப்போதே மேப்டி யிலே புறப்படு* -۔ கிறேன்’ என்று கூறிய இன் ஸ்பெக்டர் அந்த ஐம்பது வயதுக் காரனுடைய விலாசத்தையும் கெளதம் வரைந்து கொடுத்த படத்தையும் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண் டார். தம் டொயாட்டோவிலிருந்ந போலீஸ் ஆபரணங் . களைக் கழற்றி விட்டு, யோகஹாமா நோக்கி நீண்ட தூரம் பயணம் செய்து, அந்த ஆசாமி குடியிருந்த வீட்டுக்கருகில் கருகி தியேட்டர் வாசலில் கொண்டு நிறுத்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/55&oldid=768650" இலிருந்து மீள்விக்கப்பட்டது