பக்கம்:கனவுப்பாலம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கனவுப் பாலம்

அப்படிப் போகும்போதே "அம்மா! நேற்று பார்த்ததாகச் சொன்னேனே. அது இவர்தான்! கோபே ரயிலில் சந்தித்தேன், இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார், இவரோடு கொஞ்சம் வேளியே போய்விட்டு வந்து விடுகிறேன்" என்றாள்.

கோபே ரயிலில் பயணமாகிக் கொண்டிருந்த கோபால் கண்டக்டர் வந்தபோது "நான் கோபேயில் இறங்க வேண்டும். ஊருக்குப் புதியவன். தயவுசெய்து கோபே வந்ததும் எனக்குச் சொல்கிறீர்களா?’ என்று கேட்டான்.

கண்டக்டருக்கு ஆங்கிலம் புரியவில்லை.

"கோபே கோபே" என்று இரண்டு முறை சொல்லி விட்டுப் போனான். வெகு நேரம் ஆகியும் கோபே வரவில்லை. கண்டக்டரும் வரவில்லை. கோபாலுக்குச் சந்தேகம் வ்ந்து விட்டது. கோபேயைத் தாண்டி வந்துவிட்டோமா என்று நினைத்தான். அப்புறம்தான் அந்த கண்டக்டர் வந்தான்.

"கோபே எப்போது வரும்?" என்று கேட்டான் கோபால்.

'ஓ-ஹோ! கோபே?' என்று கேட்டுவிட்டு, கைகளை, விரித்து, கட்டை விரலால் கோபே திசையைக் காட்டி கோபேயைக் கடந்துவிட்ட செய்தியைச் சொன்னான்.

"இப்போது நான் என்ன செய்வது?" அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விடட்டுமா?" கோபால் பேசியது கண்டக்டருக்குப் புரியவில்லை.

இந்தச் சமயத்தில்தான் அயாகோ அவன் உதவிக்கு வந்தாள்.

"எனக்குக் கொஞ்சம் இங்கிலீஷ் தெரியும். உங்களுக்கு உதவி செய்யலாமா?’ என்று கேட்டாள்.

கோபேயைக் கோட்டைவிட்ட செய்தியை அவளிடம் சொன்னான் கோபால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/6&oldid=1064501" இலிருந்து மீள்விக்கப்பட்டது