பக்கம்:கனவுப்பாலம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாவி

9

"இரண்டு ஸ்டேஷன் தாண்டி வந்து விட்டீர்களே! கவலைப்படாதீர்கள். நான் உங்களைக் கோபேயில் கொண்டு சேர்த்து விடுகிறேன்" என்று அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, கோபாலை ஒரு கம்பத்தின் அருகில் நிற்கச் சொல்லி விட்டு ஒடிப்போய் இரண்டு டிக்கட்டுகள் வாங்கி வந்தாள்.

சில நிமிடங்களுக்குள் கோபே செல்லும் ரயில் எதிர்த் திசையில் வந்து நின்றது. ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.

"கோபேயில் எங்கே போக வேண்டும், உங்களுக்கு?"

"ஓரியண்டல் ஹோட்டல்?"

"ஓ! அது ஸ்டேஷனுக்கு அருகிலேயே உள்ளது. கொபே ரொம்ப சிக்கலான ஊர். வழி கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம். யாரும் இங்கிலீஷ் பேச மாட்டார்கள். நானே ஒட்டல்வரை கொண்டு விடுகிறேன்’ என்றாள்.

ரயில் பயணத்தின்போது இருவரும் நிறையப் பேசினார்கள்.

"இந்தியர்கள் ரொம்ப நல்லவர்கள். சின்ன வயதில் நான் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறேன். காஞ்சீபுரம் போயிருக்கிறேன். சங்கராச்சார்யார் பார்த்திருக்கிறேன். மல்லிகைப் பூ எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களுக்கு புத்தரைத் தந்தது உங்கள் இந்திய நாடுதான்’ என்றாள்.

"அதற்குப் பதிலாக நீங்கள் இந்தியாவுக்கு என்ன கொடுத்தீர்கள்?" என்று கேட்டான் கோபால்.

"கராத்தே!" என்று சொல்லிச் சிரித்தாள் அயாகோ.

கோபே வந்து விட்டது. ஓரியண்டல் ஒட்டல் வரை அவனை அழைத்துச் சென்று, ரிஸப்ஷனில் சாவி வாங்கிக் கொடுத்து, குனிந்து வணங்கிய பின்னர் விடைபெற்றுக், கொண்டாள். "மேலே என் அறைக்கு வந்து ஒரு டீ சாப்பிட்டு விட்டுப் போகலாமே!" "ஸாரி. நான் ஜப்பானியப் பெண் அங்கெல்லாம் வரமாட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/7&oldid=1064543" இலிருந்து மீள்விக்கப்பட்டது