பக்கம்:கனவுப்பாலம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. கனவுப் பாலும், 13 டோக்கியோ விதிகளில் பொழுது விடிந்து கொண்டி ருந்தது. ஒரு கம்பெனி வாசலில் கெடிகாரம் 6-40 காட்டியது. ஒரு ஜப்பானியக் கிழவன் கூன்முதுகில் கடை வாசலப் பெருக்கிக் கொண்டிருந்தான். இன் ஸ்பெக்டர் இரண்டு உதவியாளர்களுடன் ரியோ வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். நேவல் மியூஸிடம் வாசலில், கெளதம் ஸிகரெட் குடித்தபடி இன் ஸ்பெக்டரை எதிர் பார்த்துக் காத்திருந்தான் குறித்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த இன்ஸ் பக்டர் கெளதம், ரெடியா வா, போகலாம்’ என்று அழைத்தார். உதவியாளர்களில் ஒருவன் அந்த விட்டு வாசலில் துப்பாக்கியுடன் காவல் புரிய பூட்டைத் திறந்து கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தார் கள். இன்னொரு உதவியாளன் இன் ஸ்பெக்டரை நிழல் போல் தொடர்ந்து, மாடிக்கு ஏறிச் சென்றன். பூனை ஒன்று குறுக்கே பாய்ந்து ஓடியது.

  • ம்.ரியோ மட்டும் உயிரோடு இருந்தால் இதுக்குள்ளே பல ரகசியங்கள் வெளிப் பட்டிருக்கும். படுபா வி! அநியாயமா அவளைச் சுட்டுக் கொன்னுட்டானே!’ பெருமூச்சு விட்டான் கெளதம்.

கெளதம் இந்த வீடு பூராவும் ஆளுக்கு ஒரு அறையில். புகுந்து சோதனை செய்து பார்த் துடுவோம்’ என்ருர் இன் ஸ்பெக்டர். - கெளதம் ஒவ்வொரு அறையாகச் சென்று நோட்டம் விட்டான். - இன்ஸ்பெக்டர் மேஜை டிராயர்களேத் திறந்து பார்த்தார். சாவிக் கொத்து ஒன்றும் சில காகிதத் துண்டுகளும் சிக்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/74&oldid=768671" இலிருந்து மீள்விக்கப்பட்டது