பக்கம்:கனவுப்பாலம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 81: நான் சில ந்ாட்களுக்கு முன் ஒகி ஐலண்ட் ஒட்டலில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஐந்தாவது ம்ாடியில் உள் ள அறைகளைச் சுத்தம் செய்வது, படுக்கை உ றை, நைட்கவுன், டவல், க்ரீன் டீ, பிளாஸ்க் கில் சுடு த ண் ணிர், ஆஷ்ட்ரே, இவ்வளவும் மாற்றி வைப்பதுதான் எ ன் வேலே. எல்லா அறை ளேயும் நான் எப்போது வேண்டுமானலும் திறக்க முடியும். அவ்வளவு சாவிகளும் என்னிடம் இருந்தன. அன்று, கிஜிமா தங்கியிருந்த 515-ம் நம்பர் அறைக் கதவைத் திறந்து அவளேக் கீழே தள்ளி கொலே செய்தது நான் தான். அப்போது எஸ். கே. என்ற எழுத்துக்களுடன் கூடிய கர்ச்சிப் என்னிடம் இரண்டு இருந்தன. அதே மாடியில் வேருெரு அறையில் தங்கியிருத்தவரின் கை க். குட்டைகளே முதல் நாளிரவு அவருக்குத் தெரியாமல் எடுத் து வைத்துக் கொண்டேன். - அந்த எஸ். கே.யுடன் எனக்கு நீண்ட காலமாக நட்பு. உண்டு. அவர் பெயர் ஸ ஜூரா கோவிகாவா, அடிக்கடி அவருடன் ஒட்டலில் போய்த் தங்குவேன். அவரோடு சேர்ந்து படுப்பேன். உடலுறவு கொள்வேன். இதற்காக அவர் எனக்குப் பணம் தருவார். இடையில் ஒரு வருடமாய், அவருக்கும் எனக்கும் தொடர்பு விட்டுப் போயிருந்தது. அந்த ஒரு வருடகாலம் நான் வெளியூர்களில் எங்கெங்கோ அலந்து விட்டு மறுபடியும் டோக்கியேய வ. து. சேர்ந்தேன். சில நாள் வேலே எதுவுமில்லாமல் இருந்தேன. சமீபத்தில்தான் ஒகி ஒட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த ஒட்டலில் என்னே வேலைக்குச் சிபாரிசு செய்து சேர்த்து விட்ட வர் என்னுடைய இன்னெரு காதலர். பெரும் பணக்காரர். திடீரென்று அவர் என்னே ஒருநாள் அவசர மணிகச் சந்திக்க வேண்டுமென்று ஒட்டலுக்குப் போன் செய்து கூப்பிட்டார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கச் சொன்னர். சந்தித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/77&oldid=768674" இலிருந்து மீள்விக்கப்பட்டது