பக்கம்:கனவுப்பாலம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கனவுப் பாலம்

"டிக்கெட் பணம்.?" ஆயிரம் யென் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுக்கப் போனான்.

"ஓ, நோ!ப்ளெஷர்! ஹெல்ப்யூ. யாருக்காவது ஏதாவது உதவி செய்வதில் ஜப்பானியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்த மகிழ்ச்சி எனக்கு உங்களால் கிட்டியது. அதற்கு விலை கிடையாது. தாங்கள் டோக்கியோ வந்தால் என்னை அவசியம் சந்திக்க வேண்டும்."

"ஓ, நாளைக்கே வந்து விடுவேன்!” என்றான்.

"இதோ விலாசம்" என்று கூறி தீப்பெட்டி ஒன்றை அவனிடம் கொடுத்தாள். 'ஸனாயிலிருந்து மேற்கே நடந்து அடுத்த முதல் சந்தில் வடக்கே திரும்பினால் எங்கள் 'மிட்ஸூயோ ஸ்டோர்' நீலமும் மஞ்சளுமாய்த் தெரியும்."

வேறு டிரஸ் செய்து கொண்டு பின் பக்கத்திலிருந்து வந்த அயாகோ "எங்கே போகலாம், கோபால்?" என்றாள்.

"எங்கு வேண்டுமானலும்....??

தெருவில் ஒரு டாக்ஸியை நிறுத்தி ஏறிக் கொண்டார்கள்

"ஷிம்பாஷி!” என்றாள் அயாகோ.

"ஆமாம்; என்னை உன் கடைக்கு வரச் சொல்லிவிட்டு நீ எங்கே போய் விட்டாய்?"

"பிரைவேட் ஸ்கூலுக்கு. மாலை வேளைகளில் நான் இங்கிலீஷ் கற்றுக் கொள்கிறேன்."

விம்பாஷியில் இறங்கி ஒரு தெருவில் நடந்தார்கள். தியேட்டர்களும் கேளிக்கை விடுதிகளும் மலிந்த விதி.

'நிச்சிக்கேக்கி' தியேட்டர் வாசலில் பெரிய அளவு போஸ்டரில் டாப்லெஸ் பெண்கள் சிரித்தார்கள். வரிசையாகச் சம உயரத்தில் ஒற்றைக்காலை மடக்கி, மார்புகள் விம்ம...த்ரீ டைமன்ஷன் எஃபெக்ட்!

அவன் அதையே கண் கொட்டாமல் பார்த்தபோது அயாகோவுக்குக் கூச்சமாயிருந்தது.

"எங்கேயாவது போய்ச் சாப்பிடுவோமா? என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/8&oldid=1064633" இலிருந்து மீள்விக்கப்பட்டது