பக்கம்:கனவுப்பாலம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 87 அயாகோ! அதற்குத்தான் கியோட்டோ போய்க் கொண்டிருக்கிருேம்’ என்ருன் கெளதம். - கோபாலுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லே. அயாகோவை ஒரு கேள்விக் குறியோடு பார்த்தான். *திருட்டுக் கழுதை!’ என்று செல்லமாகத் தமிழில் திட்டின்ை. + - பிறகு, ஓகோ இதெல்லாம் நீங்கள் இருவரும் சேர்ந்து போட்ட ரகசிய திட்ட மோ?’ என்ருன் . 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’’ என்று சிரித்தாள் அயாகோ, : ரயில் கியோட்டோவில் நின்றது. மூவரும் டாக்ளி பிடித்து அருகிலிருந்த விண்ட்டோ கோயில் ஒன்றுக்குப் போனர்கள். - - கோயிலுக்கு முன்னுல் இருந்த நீர் ஊற்றிலிருந்து அகப்பையால் தண்ணிர் ஏந்திக் குடித்தார்கள். அப்புறம் சந்நிதியில் போய் நின்று கோபாலும் அயாகோவும் மாலே மாற்றிக் கொண்டார்கள். கெளதம், அந்தக் காட்சியைப் படம் எடுத்துக் கொண்டான். இந்த விடிை முதல் நீ அயாகோவுக்கு அடிமை!’ என்ருன், கெளதம். கோபால் சிரித்தான். - :இந்தக் கோயிலில் அதிர்ஷ்டச் சீட்டு விற்கிறர்கள். அதை வாங்கிப் பார்ப்பேர்ம். நம் எதிர்காலம் பற்றி அதில் எழுதியிருக்கும்’ என்ருள் அயாகோ. - ... கோபால் அதிர்ஷ்டச் சீட்டு ஒன்று வாங்கின்ை. பத்து அங்குல நீளத்தில் சுருள்ாக இருந்த அந்தக் காகிதத்தைப் பிரித்தபோது அதில் மேலும் கீழுமாக ஜப்பான் எழுத்துக்கள் தெரிந்தன. - - கெளதம் அதை வாங்கிப் படித்து விட்டு சரியான அதிர்ஷ்டக்காரன், நீ!’ என்றன். - - - ஏன் அப்படிச் சொல் கிருய்?" கெளதம் அந்தச் சீட்டில் எழுதியிருந்த செய்தியை கோபாலுக்குச் சொன்னன் ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/83&oldid=768681" இலிருந்து மீள்விக்கப்பட்டது